பக்கம்:சிரிப்பதிகாரம்.pdf/175

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

எஸ்.டி. சுந்தரம்

73




பூர்மான் பொதுஜனத்தின் சாட்சாத் விஸ்வரூபமான பெருங்கூட்டம், கையொலி எழுப்பி, செயற்கை இடி யோசையைக் கிளப்பியது.

நடுவராக வருகைதந்த செந்திருவாயர், தத்துவ வித்தகர், எதிர்மறை மறலியார் (பிரதிவாதி பயங்கரம்) உயர்திரு. சிந்தனையானந்தர் கிழட்டுச் சிங்கம் போல உறுமிக் கொண்டு போய் தமது இருக்கையில் அமர்ந்தார்!

அடுத்தது இளஞ்சிங்கம் போன்ற இடியேறு பீடு நடையுடன் வீரத்திரு வெருப்பானந்தர் நடுவரின் வலது புறம் வந்து இறுமாப்புடன் தம்முடைய இருக்கையைப் பற்றினார்.

பாவம். பழகிப் போன பசுமாடு மாதிரி புன்னகையோடு வந்த சிவத்திரு சிரிப்பானந்தர் துஷ்ட தேவதைகளுக்கு பலியாகப் போகும் ஆடு மாதிரி அவரது இடத்தில் அமர்ந்தார்!

இந்த மூன்று பிரமுகர்களும் முப்பெரும் சக்திகளாக அமர்ந்ததும், மூலச்சக்தியான கூட்டம் தனது பெருங் குரலெடுத்து ஒலி எழுப்பியது!

செழுமை தரும் சிரிப்பு வாழ்க!
வெற்றி தரும் வெறுப்பு வாழ்க!
சீர்மைதரும் சிந்தனை வெல்க.

என்றார்கள். ஒருமுறை எல்லோருமே கொல்லென்று சிரித்தார்கள்.

கையொலியுடன் இணைபிரியாமல் வருவது சிரிப்புத் தானே. வெறுப்பானந்தரை ஆதரிக்க வந்த திருக்கூட்டம் கூ , தன்னை மறந்து சிரிப்பின் மாய வலையில் விழுந்து விட் துயரத்தைத் தனது கண்னெதிரிலேயே கானச் சகிக்காத வீரத்திரு. வெறுப்பானந்தர், வெடுக்கென எழுந்தார். (இனிமேல் இவரைக் குறிக்க வெறுப்பு’ என்ற சொல்லையே பயன்படுத்தலாம். -