பக்கம்:சிரிப்பதிகாரம்.pdf/18

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

16

சிரிப்பதிகாரம்



பேபி : ஆ! லைலா, நம்ம காதல் என்னும் ‘டபுள்

என்ஜின்’ ஏரோப்ளேனுக்கு நாமிருவரும்
இரண்டு இறக்கைகள் கண்ணே!

ராணி : அய்யோ! ஏரோப்ளேனா? யாராவது வில்லன்

ஹை ஜாக் பண்ணிவிட்டால்.

பேபி : பயப்படாதே. அதற்கும் மேலே ஒரு ஹையர் ஜாக்

வைப்போம். இது ஸ்பேஸ் ஏஜ். மேலே மேலே
போய்க் கொண்டே இருப்போம். கண்ணே!
உடல் நான். அதற்கேற்ற பட்டு ஆடை நீ.

ராணி : ஆ! பேபி புத்தம் புதிய கற்பனையெல்லாம்

பொங்கித் ததும்புகிறதே உனக்கு!

பேபி : ராணி! உன்னைக் கண்டதும் நான் கவியரசன்

ஆகிவிடுகிறேன். உன் கடைக்கண்ணிலே கவிதையின்
இடைவெளியைக் காணுகிறேன். உன்
பார்வையின் கோர்வையிலே பாட்டின் படை
வீட்டினைப் பார்க்கிறேன். எல்லையில்லா வானம்
நீ! கொள்ளையின்பக் கானம் நீ! வானவில்
என்றால் வானவில் நொடியில் கலைந்துவிடும்.
தோகை மயில் என்றால் பெண் மயிலுக்குத்
தோகை இல்லை. ராணி! நீ புதுசா பூட்டின
பியட் கார். நான் தான் அதற்கேற்ற டன்லப்
டயர், நீ வீடு - நான் ஜன்னல். நீ ரேஷன் - நான்
அரிசி, நீ பணம் - நான் பதவி, நீ எலக்க்ஷன் -
நான் கலெக்க்ஷன், நீ பதவி - நான் லஞ்சம், நான்
பிளாக் மார்க்கெட் - நீ இரும்புப் பெட்டி, நீ
நெருப்பு - நான் சாம்பிராணி.

ராணி : நான் டாக்டர் - நீ நோயாளி.

பேபி : நான் அமெரிக்கா - நீ இங்கிலண்ட்

ராணி : நான் ப்ரான்ஸ் - நீ ஈஜிப்ட்

பேபி : இல்லை கண்ணே - நான் இந்தியா - நீ

இமயமலை. இதைப் பிரிக்க எந்த ஜின்னாவாலும்