பக்கம்:சிரிப்பதிகாரம்.pdf/185

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

எஸ்.டி. சுந்தரம் ; 183

- என்ற குறளில், நெஞ்சத்தின் கடுப்பைத்தான் முகம் காட்டும் என்கிறார். நெஞ்சின் சிரிப் பதைக் காட்டும் என்றாரா? இல்லை. இல்லவே இல்லை. -

கூட்டத்தில் ஒருவர்: நிறுத்துக வெறுப்பரே! “மோப்பக்

வெறுப்பு

கூட்டம்

வெறுப்பு

கூட்டம்

குழையும் அனிச்சம் - முகம் திரிந்து பார்ப்பக் குழையும் விருந்து” என்ற பாட்டின் கருத் தென்ன? .

அந்த குறளும் என் கருத்துக்குத்தான் உதவி

செய்கிறது. ஆம். முகந்திரிந்து பார்த்தால்

வந்த விருந்தாளி முகங்கோனும். கோணிக்

கொண்டுபோய் விடுவான் என்கிறார்.இதனால்

யாருக்கய்யா லாபம்? ஆகா! இந்தப் பஞ்ச

காலத்தில் நமக்கு சமய சஞ்சீவியாகப் பயன் படும் சிரஞ்சீவிக் குறள். என்னே வள்ளுவர் தம் தீர்க்க தரிசனம், இப்படி நாமெல்லாம் ரேஷனில் கஷ்டப்படும்போது, வரும் அழை

யாத விருந்துகளை, அஹிம்சை முறையிலே

விரட்டும் ஒரு வழியை இரண்டா யிரம் ஆண்டு

களுக்கு முன்பே தெரிந்து கண்டுபிடித்துச்

சொல்லியிருக்கிறார் என்றால், அவருடைய

தீர்க்கத் தரிசனத்தை, அதாவது தொலை

நோக்கை என்னவென்று சொல்லுவது.

ஒய்! இதுதான் நீர் திருக்குறள் படித்ததன்

லட்சனமா?

ஆம்! அதற்கென்ன ஐயம்? தொட்டனைத்து

ஊறும் மணற்கேணி என்போன்ற மாந்தர்க்கு ‘கற்றனைத்து ஊறும் அறிவு’

இதற்கு முன் இதுவரை திருக்குறளுக்கு

இவ்வாறு வலிந்து பொருள் கொண்டவர் எவரும் இல்லை.