பக்கம்:சிரிப்பதிகாரம்.pdf/19

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

எஸ்.டி. சுந்தரம்

17



முடியாது கண்ணே! நீ பொங்கி வரும் காவேரி -
நான் மேட்டூர் டாம். எந்த டேம், நான்சென்ஸும் நம்மைப் பிரிக்க முடியாது.

ராணி : சரி போதும். அந்த சோகரசப் பாட்டையும்

பாடித் தொலைத்துவிடு. அதுதான் உன் பாத்திரத்துக்கு
முக்யமான சீன். உம்.... எங்கே தாடி....
தாடியைக் கட்டிக் கொண்டே பாடினாத்தான்
உனக்கு மேடையிலே சுலபமாயிருக்கும். உம்... நடி
கண்ணே நடி! உலகமே ஒரு நடிப்பு மேடை.

பேபி : இதோ.. எல்லாம் ரெடியாயிருக்குது கண்ணே!

(மேஜை மீதிருந்த தாடியை எடுத்துக் கட்டிக் கொள்ளுதல்)

பாட்டு

உருகுதடி தாரகைகள் வானிடிந்து நடுங்குதடி
எரியுதே உலகமெல்லாம் - இனி நான்
போவது மெங்கே வழி எங்கே

பறந்து செல்லும் பைங்கிளியே மறதியாகுமா?
இது நீதியாகுமா?
விதி எதிர்த்து அழித்தாலும் உடல் புகைந்து போனாலும்
எழுகடல் எரிந்தாலும் உன் நினைவினிமாறாதே என் ஜீவனே

(ஒரே சோகமான இருகுரல் பாட்டைப் பாடுகிறார்கள். மேடையில் உள்ளிருந்தே வேலைக்காரன் சாமி கதவைத் தட்டுகிறான்)

சாமி : பேபி... பேபி... பேபி... கதவைத் திறப்பா! பேபி...

பேபி...

பேபி : கடங்காரன் எவனோ இப்ப வந்துட்டானே.

பாலிலே உப்பு போட்ட மாதிரி... சரி, ராணி
கொஞ்ச நேரம் அப்படிப் போய் மறைந்திரு.
பிறகு நாடகத்தைத் தொடரலாம்.
(கதவைத் திறக்கிறான்)
(சாமி உள்ளே வருகிறான் )