பக்கம்:சிரிப்பதிகாரம்.pdf/194

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

182

சிரிப்பதிகாரம்




“சரி சரி நீர் யார், பேசுவதைப் பார்த்தால், சந்தேக மில்லாமல் நீர் ஒரு சினிமா வசனகர்த்தாவேதான். உமது அடுக்கு மொழிகளைக் கேட்டால், உமது அறிவின் தேம்பல் புலப்படுகிறது. எதனால் இப்படி ஆனிர்? வெளியில் சொல்லி யாவது உம் துயரத்தை ஆற்றிக் கொள்ளும். முடிந்தால் என்னால் ஆன உதவியைச் செய்கிறேன்” என்றேன் கடைசியாக,

அவ்வளவுதான்! சினிமா முடிந்ததும், ஒன்றை ஒன்று இடித்துக் கொண்டு வெளியேறும் ஜனக்கும்பலும் - சைக்கிள் கூட்டமும் போல், அவரது சோகக் கதையும், சூடான கண்ணிரும் ஒன்றையொன்று முட்டி மோதிக் கொண்டு வெளியே வந்தன.

அவர் தமது வரலாற்றைச் சொல்லத் தொடங்கினார். சார்! என் பெயர் சோணாசலம். சொந்தக் கிராமத்தில் சுகவாசியாயிருந்தேன். பத்து வேலி நிலம், நாலு வீடு. ஆள், தேள், வண்டி, கிண்டி எல்லாம் இருந்தன. உலகத்தைப் பற்றித் தெரிந்து கொள்ளாமல், உலகம் நம்மைத் தெரிந்து கொள்ளட்டுமே என்று அலட்சியமாக இருந்தேன். அதற்காக, உலகம் என்னைப் பழிவாங்க நேரத்தை எதிர்பார்த்துக் கொண்டிருந்தது போலும். என் விதியின் துரதராக வந்தான் ஒரு ஆசாமி! அவன் பெயர்தான் உயர்திரு ஆசைமணி!

எனது செல்வமெல்லாம், அமைதியான நதிக்கரை, தாவரக் கடலான வயல்கள், அசைந்தாடும் தென்னந்தோப்பு, அதில் அசை போடும் கால்நடைகள், சுகமான சாப்பாடு, சொந்த வீடு இவைதாம். இந்த இன்பங்களை விட்டு நிக்கல் ரூபாய்களிலோ, பித்தளைக் காசுகளிலோ, அல்லது தொட்டால் தூளாகும் சாமான்கள் மீதோ, எனக்கு நாட்டம் பிறந்ததில்லை. ஆனால், அந்த ஆசைமணி என் வீட்டில் அடியெடுத்து வைத்தது தான் தாமதம், என் மனம் தடுமாறத் தொடங்கியது.

பாழாய்ப் போன ஆசையாரின் பிடிவாதத்தின் பேரில் தற்காலிகமாக நான் சென்னையில் குடியேறினேன். ஸ்ரீமான்