பக்கம்:சிரிப்பதிகாரம்.pdf/195

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

193

எஸ்.டி. சுந்தரம்


ஆசையார், என்னை எங்கெல்லாமோ இழுத்தடித்தார். கார்ப்பரேஷன் மேஸ்திரிகூட, அப்படித் தெருத் தெருவாகச் சுற்றியிருக்க மாட்டேன். நாங்கள் அப்படி அலைந்தோம். முதன் முதலாகச் சென்னையில் எனக்கு சினேகமானது. ஹோட்டல் சாப்பாட்டினால் வந்த டயோரியா நோய். அதன் காரணமாக ஒரு டாக்டரின் நட்பு. அது நீடிக்க ஒரு காரின் தேவை. கார் காரணமாக நான்கு பேர் சினேகம். நண்பர்கள் நீடிக்க ஒரு பங்களா, பங்களா நீடிக்கப் பணம் இப்படியாக எனது தேவையின் பட்டியல் குரங்கின் வால் போல வளர்ந்து கொண்டே போயிற்று. உயர்திரு ஆசை யாருக்கு அனுமார் என்ற புனை பெயரும் உண்டு என்பதையும் அறிந்து கொண்டேன்.

பங்களா வாங்கிவிட்டுப் பேசாமல் உட்கார்ந்திருந்தால் மேலே காரியம் நடக்குமா?

ஆகவே நாங்கள் ஒரு ‘பிஸினெஸ் ஆரம்பிக்கத் திட்டம் போட்டோம். ‘ஹோட்டல் வைக்கலாமா?’ என்று கேட்டார் ஸ்ரீமான் அனுமார்.

“ஹோட்டல் உலகம் தெரியாதே” என்றேன். “பத்திரிகை ஆரம்பிக்கலாமே!”

“எழுதத் தெரியாதே என்ன செய்வேன்!” என்று கையை விரித்தேன். -

“சினிமா பிடிக்கலாமே” என்றார்.

“சினிமாவைப் பார்க்கக் கூடத் தெரியாதே பிடிப்பது எப்படி என்றேன். -

“பரவாயில்லை? பணமிருந்தால் போதும். அறிவை விலைக்கு வாங்கித் தொழில் செய்ய முடியும். பிறர் அறிவும், நமது பணமும் சேர்ந்தால், கொள்ளை லாபம் தானாகவே கதறிக் கொண்டு வரும். மேலும் சினிமாத் தொழில் பெரிய கம்பச் சித்திரமல்ல. ஒரே மாதத்தில், சினிமாவின் சகல தொழில் இரகசியங்களையும் கற்றுக்கொள்ள முடியும். அதற்கு மேல் கற்றுக் கொள்ள அதில் ஒன்றுமில்லை. உங்கள்