பக்கம்:சிரிப்பதிகாரம்.pdf/196

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

194

சிரிப்பதிகாரம்



அறிவுக்கு ஒரு மாதமே அதிகம்’ என்று என்னை முடுக்கி விட்டார் மிஸ்டர் அனுமர். ஆசை என்ற அனுமாரின் வலையில் விழுந்த என்னை தமது வாலைக் கொண்டு சரியாகக் கட்டிப் போட்டு விட்டார். சினிமா ப்ரொட்யூவர் என்ற பட்டத்தையும் சூட்டிக் கொண்டேன். தலை ஆட்டங் கண்டது. மண்டையில் வீக்கம் கண்டது! . .

கிராமத்தில் எனக்குச் சொந்தமான வீடுகளை விற்றேன். பட்டணத்தில் உள்ள பங்களாவுக்குக் கொடுக்கும் வாடகைப் பங்களாவாக மாறின. காவிரிக் கரை வயல்களின் வாய்க்கால் ஊற்றுக்கள், காருக்குப் பெட்ரோல் ஊற்றாக உதவின. அருமையான மாந்தோப்பை விற்றேன். அந்தத் தொகையைக் கொண்டு ஸ்டுடியோவில் காகிதத் தோப்புகளை நிர்மாணித் தேன். பணத்தை வாரி இறைத்தேன்.

படத்தைப் பிடித்தேன். தங்க நகைகளை விற்றுத் தகர டப்பாக்களை வாங்கினேன். சொக்கத் தங்கத்தை மாற்றி, செல்லுலாய்ட் பிலிம்களைச் சுருட்டினேன். சிவந்த ரோஜா மலர்களால் கடவுளை அர்ச்சித்த என் கைகள் காலையில் சிகரெட்டு டப்பாக்களை ஏந்திய வண்ணம் கருகிக் கொண்டிருந்தன. இப்போது சென்னையில் இருபது மாதங்களையும் ஏழு லட்சத்தையும் செலவு செய்த ஒரு பெரும்பட முதலாளி நான் படம் பாதி முடிந்தது. அதற்குள்ளாக இயற்கையாக என்னிடம் அமைந்திருக்கும் குணங்களும் பாதி மறைந்தன.

இப்போது எனக்கு எவரைப் பற்றியும் கவலையில்லை. ஏனெனில் நான் சினிமாவைப் பற்றி எல்லாம் தெரிந்தவனாக சகல கலா வல்லவனாக ஆகிவிட்டேன். இந்த அபிப்ராய போதை அகங்கார விஷமாக மாறி, என் அறிவைச் செல்லரித்து விட்டது. நான் எடுத்துக் கொண்டிருந்த படத்தைப் பற்றி, எல்லோரும் ஒரே குரலில் புகழ்ந்து பேசியது உண்மைதான். - * . . -

அதுவரை வேலை செய்தவர்களைக் கொண்டேதொடர்ந்து முடித்திருந்தால் நிச்சயமாக அது நல்ல