பக்கம்:சிரிப்பதிகாரம்.pdf/200

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

198

சிரிப்பதிகாரம்




புரியவில்லை. கடைசியாக நட்சத்திரத்தின் முடிவுக்கே நான் வோட்டுக். கொடுத்தேன். ஆரம்பத்தில் இந்த டைரக்ரே தான் அந்தக் கதாநாயகிக்கு இரண்டு லட்சத்தை வாங்கிக் கொடுத்தார். இப்போது அவள் சொற்படி நடக்க மாட்டேன் என்று அவர் சொன்னால், அது வியாபார நியாயமாகுமா? எனது முடிவைக் கேட்ட டைரக்டர், என்னிடம் கோபித்துக் கொண்டு தமது ஆட்களுடன் வெளியேறி விட்டார். -

கதாநாயகி இப்போது என் கமபெனியின் சர்வாதிகாரி ஆனாள். “இன்னும் ஆறு மாதத்தில் படத்தை முடிக்கா விட்டால், மேற்கொண்டு இரண்டு லட்சம் தரவேண்டும்” என்று பயமுறுத்தினாள். எனக்கோ வேறு டைரக்டர் கிடைக்கவில்லை.

ஆகவே நானே டைரக்டர் ஆனேன். கதை எழுத எந்தக் கவியும் முன்வராமல் போகவே கதாநாயகியே கதை, வசனம், பாடல், நடனம், சங்கீதம் எல்லாவற்றையும் கற்பனை செய்து என் அறிவைச் சென்னைச் சாக்கடையாக்கிக் கொண்டி ருந்தாள்.

அதன் பலனாகத் திடீரென்று ஒருநாள் கதாநாயகனும் மனம் நொந்து, என் கம்பெனியிலிருந்து வெளியேறி விட்டார். -

‘மேக்கப் மேன் என்னைக் கதாநாயகன் ஆக்கிவிடுவதாக தைரியமளிக்கவே, நான் கதாநாயகனானேன். கதாநாயகி டைரக்டரி ஆனாள்; ஒரு மாதிரியாகப் படம் முடிந்தது.

இனி படத்தை விற்று, வாங்கிய கடனைக் கொடுத்து விடலாம் என்று பெருமூச்சுடன் உட்கார்ந்தேன். படத்தை வாங்க எவரும் முன்வரவில்லை.

இந்தக் கவலையில் நான் தத்தளித்துக் கொண்டிருந்த போது, முன்பு என்னிடம் கோபித்துக் கொண்டு போன டைரக்டர் அதிகம் குடித்த காரணத்தினால் மாரடைப்பால் காலமானார்! என்ற ஒரு செய்தி வந்தது. அதற்கு மறுநாள், கதாநாயகனுக்குக் கதாநாயகி மேல் கொண்ட காதல் முறிவு. காலனாக முடிந்ததால் அவனும் செத்ததாகச் செய்தி வந்தது.