பக்கம்:சிரிப்பதிகாரம்.pdf/21

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

எஸ்.டி. சுந்தரம்

19



சாமி : அடே! இந்தக் குட்டித்தாடி யார்?

பேபி : இவன் என் ப்ரண்ட் மிஸ்டர் ராஜா!

சாமி : ராஜாவா - எந்த ஊர் ராஜாப்பா? இவரு ராணி

எங்கே?

பேபி : முட்டாள்! நாங்கள் அடுத்தவாரம் காலேஜ்லே

லைலா மஜ்னு நாடகம் போடப்போகிறோம்.
அதுக்காக ஒத்திகை நடத்துகிறோம்.

சாமி : நாடகத்திலே இது என்னா கட்டமப்பா!

பேபி : இது ஸ்வாரஸ்யமான காதல் கட்டமடா!

சாமி : இது என்ன எழவுக் காதல். தாடிக் காதல்.

பேபி : அடே! உனக்கொன்றும் தெரியாது. காதலர்கள்

தாடியோடு சந்திக்கும் ஒரு பயங்கரமான கட்டம்
இது. பரபரப்பான சுறுசுறுப்பான விறுவிறுப்பான
காட்சி!

சாமி : அடப்பாவமே! என்னா பேபியிது. உங்கப்பா

கோடீஸ்வரர். அவருக்கு பிள்ளையா வந்த
நீ, இப்படி எல்லாம் பிச்சைக்கார வேஷம்
போட்றது நல்லாவா இருக்குது.எனக்கொன்னும்
பிடிக்கலே பேபி, என்ன தம்பீ - நீங்க சொல்லுங்க
- பணக்காரர் புள்ளை பிச்சைக்கார வேஷம்
போடலாமுங்களா?

பேபி : பணக்காரன், ஏழை என்கிற வித்தியாசம் இந்த

பேபியிடம் கிடையாது.. நான் ஒரு பெரிய சமரஸ
வியாதி.

சாமி : என்னா_ என்னா! சமரஸ வியாதி - என்னாப்பா

இது. இதுவரையிலும் கேள்விப்படாத புது
வியாதியாயிருக்குது!

பேபி : சம... ரஸ... வியாதி..!

சாமி : பரவாயில்லை பேபி! வியாதியிலேகூட ஒரு

சமரஸ வியாதி இருக்குதே. எனக்குத் தெரியலே