பக்கம்:சிரிப்பதிகாரம்.pdf/23

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

எஸ்.டி. சுந்தரம்

21



வேண்டுமா? கோவலனைப் போல் கொல்லப்பட
வேண்டுமா? நான் தயார்!

சாமி : என்ன பேபி! ஆவேசம் வந்தவன் மாதிரி பேசறே?

புலி வேஷம் மாதிரி ஆடறே!

பேபி : ஆம். அமரகாதலைப் பற்றி நினைத்தால்

ஆவேசந்தான் வருகிறது! போடா! இந்த தெய்வீகக்
காதலைப்பற்றி உனக்கு ஒன்றும் தெரியாது.
புரியாது. விளங்காது.

சாமி : சும்மா இருப்பா. இதெல்லாம் எனக்கு முப்பது

வருஷத்திற்கு முந்திய்யே புரிஞ்சு போன விஷயம்.
இந்த எழவெடுத்த காதல் இருக்குதே, காதல்...
அது ஏழெட்டுக் குட்டிச் சாத்தான்களை
உண்டாக்கி விட்டு, இப்போ ரிடயர் ஆயிடுச்சு.
இப்போ அதுக்கு நான் பென்ஷன் குடுத்துக்கிட்டிருக்கேன்.

பேபி : சரி. அலவன்ஸும் சேர்த்துக் குடு போ. அது சரி

- ஒல்ட்மேன்! நீ இப்போ எங்கே வந்தே, எதுக்கு
வந்தே, ஏன் வந்தே?

சாமி : நானா? நீ எங்கே இருக்கே? என்ன செய்யறே?

எப்படிப் படிக்கிறேன்னு பார்க்கலாம்னு
வந்தேன்? அது கிடக்கட்டும் பேபி. உங்கப்பா -
உங்கிட்டே ஒரு முக்யமான விஷயம் சொல்லிட்டு வரச் சொன்னாரு.

பேபி : அது என்ன முக்கியமான விஷயம்!

சாமி : உனக்குப் பெண் பார்க்கப் போகணுமாம்

நாளைக்கு. ராத்திரியிலே எங்கேயும் போகாம
நல்லாத் தூங்கச் சொன்னாரு.

பேபி : முட்டாள் - எனக்கு வேறே பெண் எதுக்கு?

சாமி : இப்படியே நாடகமாடிக்கிட்டு இருந்திடலாம்னு

இருக்கியா?