பக்கம்:சிரிப்பதிகாரம்.pdf/24

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

22

சிரிப்பதிகாரம்


பேபி : கலையே என் உயிர் கலைக்காகவே நான்

வாழ்கிறேன். கலைவாணிதான் என் காதலி.
மற்றப் பெண்களை மனத்தாலும் நான் பார்க்க
மாட்டேன். எல்லாம் வல்ல ஈசன், என் அப்பன்
தில்லை வாழ் நடராசன் கொடுத்த தலையை
மறந்து கல்யாணம் செய்து கொள்ள மாட்டேனடா
கசடனே! சரி சாமி நேரமாகுது. ராஜா
கோவிச்சுக்குவான். நீ போ. ஒத்திகை முடியட்டும்
காலையிலே வா. உபத்திரவப் படுத்தாதே! இந்தா
இதை வைத்துக் கொள். போய்த் தொலை.
(பணம் தருகிறான்)

சாமி : ஆ! பத்து ரூபாய் - பலே, இனிமே ஒரு நாளைக்கு

நூறு தரம் நாடகம் நடத்தப்பா - அமர்க்களமா
நடத்துங்க, காலா காலத்திலே கல்யாணம்
நடந்திட்டா இந்தக் காதல் ஒத்திகை வேணாம்.
உண்மை நாடகமே நடத்தலாம். குட் நைட் பேபி.
(கிளம்புகிறான்)

பேபி : ஒல்ட்மேன், யார்கிட்டேயும் சொல்லாதே

ஒல்ட்மேன் நீ ஒரு கோல்ட்மேன்!

சாமி : ஆமாம். ஜாக்ரதை. உன் காதல் பீல்டிலே

கலியாண வேலிபோட்டு பயிர் பண்ணு, குட்பை!
(போன பின்)

பேபி : ராணி

ராணி : போதும் தொடாதே!

பேபி : என்ன ராணி உண்மையிலேயே நடிக்கிறே?

ராணி : யார் பெண்? நாளைக்குப் பார்க்கப் போகிறாயாமே!

பேபி : ராணி! அப்பாவின் காசாசைக்காக, நான் இந்தக்

கல்யாண விலங்கில் மாட்டிக் கொள்ள
மாட்டேன். கொஞ்சம் நாள் பொறு. வீட்டில்