பக்கம்:சிரிப்பதிகாரம்.pdf/28

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

26

சிரிப்பதிகாரம்



செளக்கியமா! தாத்தா - எங்க காலேஜிலே
பேபிக்கு பபூன்னு பேரு.

ம.பூ : அப்படியா - ஒவல்டின் கொண்டு வாம்மா!

வாணி : ஆகட்டும் தாத்தா

(மேஜை மீதிருத்த பிளாஸ்கிலிருந்து ஊற்றித் தருகிறாள்)

பூபதி : அற்புதமாயிருக்கு - பேஷ் - வாணிக்கு ஒவல்டின்

கூட போடத் தெரியுமா?

ம.பூ : என்னப்பா பேபி - சாப்பிடு - ஒவல்டின் கேக்

எல்லாம் சாப்பிடு.

பேபி : தாத்தா இந்த மேல்நாட்டு உணவுகள் எல்லாம்

எனக்கு பிடிக்காது தாத்தா, நான் அவைகளை
வெறுக்கிறேன்.

ம.பூ : பின்னே என்னதாம்பா உனக்குப் பிடிக்கும்?

பேபி : சொல்லட்டுமா தாத்தா! எனக்கு சுத்தமான

சுதேசிப் பலகாரமான இட்லிதான் தாத்தா
பிடிக்கும், பாருங்க தாத்தா, இந்த இட்லியின்
மகிமையைப் பற்றி ஒரு கவிகூடப் பாடியிருக்கேன்.
அதைப் பாடட்டுமா தாத்தா!

பூபதி : டே பேபி...

ம.பூ : பரவாயில்லை எங்கே பாடு பார்ப்போம்.

(உடனே பாடுகிறான்)

பேபி : யாமறிந்த உணவுகளில் இட்லியைப் போல்

இனிதாவதெங்கும் காணோம்
தேமதுர வடநாட்டு ஜாங்க்ரி எல்லாம்
தென்னகத்து இட்லியின்முன் நிற்குமோதான்?
நாமமது ஸ்வீட் என்று நெய்யே இன்றி
நாக்குகளை அறுப்பதனால் என்ன லாபம்?
சேமமுற சாப்பாடு செழிக்க வேண்டில்
சேர்ந்தெல்லாம் இட்லிகளை ஆதரிப்போம்