பக்கம்:சிரிப்பதிகாரம்.pdf/30

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

28

சிரிப்பதிகாரம்



சே, சே, ரொம்ப மோசம் தாத்தா,, வரவர
எஜுகேஷன் ரொம்ப ஹோப்லஸ் - கல்வி! ஒரு
கண்றாவி! இந்த பரீட்சை என்ற பிசாசு ஒழிந்தால்
தான் பாஸ் பண்ண முடியும் போலிருக்கு தாத்தா.
உண்மையாச் சொல்லப் போனா இந்த பாழும்
பரீட்சை ஒழிந்தால்தான் நமது பாரதநாடு
உருப்படும், வாட் யூ சே வாணி?

வாணி : எப்படித் தாத்தா பேபியின் பிரசங்கம்?

ம.பூ : ஒகோ! பரீட்சையின் எதிரிகளில் நீயும் ஒரு

ஆளா தம்பி!

பேபி : ஆமாம் தாத்தா! என்னைப்போல் புத்திசாலிகளெல்லாம்

கூட பெயில் ஆகறதுக்கு, இந்த
பரீட்சை தானே காரணம். ஆகையால் அது
ஒழிக! நான் வாழ்க! பரீட்சை எதிர்ப்பு இயக்கத்திற்கு
நான்தான் தாத்தா தலைவன். தாத்தா,
உண்மையாகச் சொன்னா. சீனாவும் அமெரிக்காவும்
ஒத்துப் போனாலும் போகலாம். ஆனால்
மாணவர்களும் பரீட்சையும் ஒருக்காலும் ஒத்துப்
போகவே முடியாது. இது சத்தியம்.

ம.பூ : பேஷ்... பேஷ்... பேபிக்கு பேசத் தெரியாது

என்கிறீர்களே பூபதி - பெரிய ஆள் போல
இருக்கே எழவு அரசியல் வியாதிபோல உளறித்
தள்ளுறானே?

வாணி : ஆமாம் தாத்தா இந்த அரசியல் அதிசயத்தை

ஆப்பிரிக்காவுக்குத்தான் அனுப்பணும்.

பேபி : வாணி புத்திசாலி! பாருங்க தாத்தா! பரீட்சை

ஒரு தொத்து வியாதி, காலேஜ் ஒரு டி.பி.
ஆஸ்பிடல்

பூபதி : பேபி என்னடாயிது, பேசாமலிரு.

அவன் அப்படித்தான் மாமா - தமாஷாப் பேசுவான்.
எல்லாப் பேப்பரும் நல்லத்தான் எழுதியிருக்கான்
கட்டாயம் பாஸ் பண்ணிவிடுவான்.