பக்கம்:சிரிப்பதிகாரம்.pdf/49

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

நகைச்சுவை! ஒரு ஆராய்ச்சி நகை இல்லாத நங்கையா?

இப்போது நகைச்சுவையைப் பற்றி ஒரு ஆராய்ச்சியில் நாம் இறங்கப் போகிறோம். சரியாய்ப் போச்சு, எதற்கெடுத் தாலும் ஒரே ஆராய்ச்சிதானா? என்னய்யா இது? நகைச்சுவை என்ன இரசாயனச் சாலையா? கல்வெட்டா? புதைப் பொருள் இலாகாவா? இல்லை, துப்பறியும் இலாகாவா? கலப்பட மருந்தா? ஆஸ்பத்திரியா? இல்லை மாஜி அரசியல் வாதியின் ஊழல்கேஸா? என்றெல்லாம் தயவுசெய்து பயப் படாதீர்கள். ஆராய்ச்சி என்பது இந்தக் காலத்தில் ஒரு அவசியப் பொருளாகி விட்டது.

திரை இல்லாத நாடகமா?

நாடகத்தில் கதாநாயகன், கதாநாயகி அல்லது இவர் களைப் பிடித்து விளையாடும் வில்லன், இவர்கள் மாத்திரந் தான் நாடகத்திற்கு இன்றியமையாத பாத்திரங்கள் என்று தானே நாம் எல்லோரும் எண்ணிக் கொண்டிருக்கிறோம். இல்லை, ஒரு நாடக வெற்றிக்கு இவர்கள் மட்டும் இருந்தால் போதாது. அனுஸ்வரங்களின் உதவி அவசியம் தேவைப்படு கிறதல்லவா? -

பெண் இல்லாத கல்யாணமா?

அதைப்போல் ஒரு நாடகத்தின் வெற்றிக்கு நகைச்சுவை மிக முக்கியமான தேவையாகிறது. சிரிப்பில்லாத நாடகம் பருப்பில்லாத கல்யாணம். கருப்பில்லாத தலைமுடி செருப் பில்லாத காலடி. சண்டையில்லாத சங்கம், சவால் இல்லாத பிரசங்கம், ஆடையில்லாத அங்கம். கண்தெரியாத சிங்கம். கொடியில்லாத கட்சி. கொள்கையில்லாத கொடி! கண்ணில்லாத காட்சி. ஊழல் இல்லாத ஆட்சி. விஷமில்லாத பூச்சி. பணமில்லாத தேர்தல், பொய்யில்லாத சாட்சி. சிரிப்பில்லாத குழந்தை விளக்கில்லாத கோயில், நீரில்லாத