பக்கம்:சிரிப்பதிகாரம்.pdf/50

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

48

சிரிப்பதிகாரம்


ஆறு, பேரில்லாத தலைவன். மோரில்லாத சாப்பாடு. காரில்லாத நடிகன். தேரில்லாத திருவிழா. ஊரில்லாத நாடு, வேரில்லாத மரம். சேறில்லாத நெல்வயல். நன்றியில்லாத மனிதர். சோறில்லாத விவசாயி. துணியில்லாத நெசவாளி. நயவஞ்சகமில்லாத சுயநலம். பாசமில்லாத நேசம். ஆசை இல்லாத பணம், அதைப்போல் நகைச்சுவையில்லாத நாடகமும் இருக்க முடியாது!

உடம்பும் உயிரும்!

உடம்புக்கு கால் எவ்வளவு அவசியமோ, வாய்க்குப் பல் எவ்வளவு அவசியமோ, கண் விழிக்குப் பாவை எவ்வளவு முக்கியமோ? தடாகத்திற்குத் தாமரை எவ்வளவு அழகோ, குளத்திற்கு தண்ணிர் எவ்வளவு அவசியமோ, கொடிக்கு மலர், மரத்திற்குப் பழம், பண்ணுக்கு சுருதி, பாட்டுக்குத் தாளம், நாட்டியத்திற்கு லயம், பெண்ணுக்குப் பொறுமை, ஆணுக்கு ஆண்மை, பதவிக்குப் பெருந்தன்மை, நட்புக்கு உதவி உதவிக்கு விளம்பரமின்மை, செல்வத்திற்கு ஈகை, தலைவனுக்குத் தகைமை, வீரனுக்குத் தியாகம், வெற்றிக்கு அடக்கம், குழந்தைக்கு மழலை, பயிருக்கு மழை, நெஞ்சுக்கு உறுதி, பார்வைக்கு அழகு, பண்புக்கு அன்பு, தர்மத்திற்கு தயாளம், இதுவெல்லாம் போல் நாடகத்திற்கு நகைச்சுவை மிகமிக அவசியம். இன்றியமையாதொரு அங்கம். சிரிப் பில்லாத நாடகம், இனிப்பில்லாத பாயசம். ஆதலால் நாம் வாழ, நாடு வாழ, நாடகம் வாழ, நகைச்சுவை அவசியமா கிறது. அடேயப்பா, எவ்வளவு பெரிய ஆராய்ச்சி செய்து வீட்டீர் அய்யா என்று கேட்கத் தோன்றுகிறதல்லவா, உங்களுக்கு கொஞ்சம் பொறுங்கள். ஆராய்ச்சி என்றால் அவ்வளவு எளிதா என்ன?

சிரிப்பா? மறுப்பா?

கவிஞர்கள் காதல் உணர்ச்சிக்கு எக்கச்சக்கமான ஆடம்பர மெருகூட்டி, காதலை நவரச மணிகளின் ஒளி மகுடமாக ஆக்கப் படாதபாடுபடுகிறார்கள். பாவம். ஆசிரியர் செய்யும் அத்தனை முயற்சியும், அவரே படைத்த ஒரு