பக்கம்:சிரிப்பதிகாரம்.pdf/52

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

50

சிரிப்பதிகாரம்


கள் ஒன்றுபடாத உடல்கள். சினிமாக் காட்சிகளில், வாங்கும் பனத்துக்காக இரண்டு உடல்கள் வெயிலில் படுத்துப் புரள்வதைப் பார்த்துக் கை தட்டலாம். ஆனால் அது காதலாய் விடுமா என்ன? அது காசு ஆகுமே தவிர காதல் ஆகாது. எல்லாம் சுத்த வெங்காயம்!

நிஜ வாழ்க்கையில் உள்ளங்கள் ஒன்றுபட்டால்தான் உயிர்கள் வாழ முடியும். இந்த உண்மைகளை இளமை யிலேயே உணர வைப்பது, பெரியோர்களது அன்பான பாச வாழ்க்கை கடமையின் சூழ்நிலை சத்தியத்தை அஸ்திவார மாகக் கொண்டு நடைபெறும் நல்ல குடும்பங்கள்! இந்த உண்மையை அறிந்தாலும் சரி, அறியாவிட்டாலும் சரி, இளமை துடிக்கத்தான் செய்யும். அதைப் பார்த்து ஊர் சிரிக்கத்தான் செய்யும்.

இன்பமா! துன்பமா!

இந்த இளமையின் விளையாட்டில்தான் எத்தனை ரசமான சங்கதிகள். எவ்வளவு சுவையான விளைவுகள். கொஞ்சல்கள்! குலுங்கல்கள்! வளைவுகள், நெளிவுகள், என்னென்ன விதமான குழைவுகள், குதூகலங்கள், அன்ன நடையென்ன? வண்ண உடை என்ன? பின்னல் சடையென்ன? பேச்சுக்கள் ஏச்சுக்கள், கைவீச்சுக்கள், பெரு மூச்சுக்கள், இரகசியங்கள் என்று காதலர்கள் எண்ணிக் கொண்டிருக்கும், உலகறிந்த உண்மைகள். காதலர்கள் அறையில் அனுபவிக்கும் சுகங்கள். ஏதோ தங்களுக்கு மாத்திரந்தான் ஏற்பட்ட அனுபவம், வேறெந்தப் பயலும் இப்படி அனுபவித்திருக்க முடியாது என்று எண்ணும், இந்த சங்கதி, உலகில் பிறந்த ஒவ்வொரு காதல் ஜோடியும், அனுபவித்துத் தீர்ந்த மிகப் பழசான விஷயம் என்பதை அறிந்தும் அறியாதது போல் பேசிக் கொண்டு இருக்கிறார்களே! இந்தக் காதலர் சம்பாஷனைகளைவிட மிகப் பெரிய நகைச்சுவை உலகில் வேறெதுவும் இருக்க முடியாது.

உயிரோடு ஒன்றுபட்ட அன்பு பேசாது. உடலோடு ஒட்டிய காமம் பக்கம் பக்கமாகக் கத்திப் பேசும், டுயட் பாடும். ட்விஸ்ட் நடனம் ஆடும் தீராத கோர்ட்டுக் கேஸாக