பக்கம்:சிரிப்பதிகாரம்.pdf/53

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

எஸ்.டி. சுந்தரம்

51


வளரும்! சில உளரும்! அவை அருமையான நகைச்சுவை களாக நம்மைச் சிரிக்க வைக்கின்றன. ஒவ்வொரு காதலனும் காதலியும் ஏதோ அவர்கள் அனுபவித்த இன்பத்தை, உலகில் மற்றெந்த உயிரும் அனுபவித்திருக்கவே முடியாது, என்று இருமாப்பு அடைவார்களாம். அந்த இறுமாப்பின் உச்சியில் நின்று அவர்கள் பேசும் பேச்சிலே காதல் ரசத்தைவிட, சிரிப்பு ரசம் தான் அதிகமாக வருமாம். இது கவிஞர்களது கணிப்பாம். அதாவது நாம் ஒன்று நினைக்க, தெய்வம் ஒன்று நினைக்கும் அவலநிலை இது! கவி, காதல் என்பதை, ரசிகன் ஹாஸ்யம் என்கிறார்.

ஆசிரியர் காதல் என்று ரொம்பச் சீரியஸாக நினைக்கும் பாத்திரங்கள் எல்லாம், மிகமிகச் சிரிக்க வைக்கும் சிம்பிள்டன் பாத்திரங்களாக மாறிவிடுவதும் உண்டு. அதாவது காதல் மிகையானால், அதன் முடிவு நகைச்சுவை யாகும். அதாவது இந்தக் காதல் உடும்பு இருக்கிறதே, ‘உடும்பு’ என்பதற்கு கோபித்துக் கொள்ளாதீர்கள். உடும்பு பிடித்தால் விடாது. குடும்பமும் அப்படித்தான். இது ஜன்ம ஜன்மாந்திரங்களில் நடக்கும் சுவாரஸ்யமான சோகக்கதை. சுகமான நாவல் என்றும் சிலர் சொல்வார்கள்.

கனியா! காயா?

ஆதியில் தேவனால் ஒதுக்கப்பட்ட மரத்திலிருந்து (Forbidden Tree) மறுக்கப்பட்ட ஒரு காமக்கனியைப் பறித்துத் தின்றுவிட்ட ஆதாமும் ஏவாளும் (ADAM and EVE) ஆரம்பித்து வைத்த மாய விளையாட்டைத்தான் காதல் என்று ஏமாறுவதாக, கிறிஸ்தவ மறையான பைபிள் பேசும். காதலைப்பற்றி இது மேற்குத்திசை கண்ட ஆராய்ச்சி!

ஆணா! பெண்ணா?

நம் நாட்டிலோ, எல்லாமே ஈசன்.திருவிளையாடல்தான்! ஆண்டவனே அர்த்தனாரீஸ்வரன்; அதாவது பாதிப்பெண் ஆண்டவன் காதல் என்றால் அது ஒரு கடவுள் வழிபாடு! இறைவனுக்கு மனித ஜீவன் படைக்கும் நிவேதனம்! ‘காதலாகிக் கசிந்து கண்ணீர் மல்குவதே ஆண்டவனுக்கு