பக்கம்:சிரிப்பதிகாரம்.pdf/54

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

52

சிரிப்பதிகாரம்


மனிதன் செய்யும் நித்திய பூஜை’ என்பார்கள் பக்தமணிகள் மனித குலத்தை மிருக நிலைக்குத் தள்ளிவிடாமல், நாளது வரை காப்பாற்றும் ஒரு கடமையில் உதித்த, கெளரவமாக வளர்ந்த ஒரு சமுதாயக் கட்டுப்பாடுதான் காதல் என்பது எல்லோரும் ஒன்றாக ஏற்றுக்கொள்ளும் ஒரு உண்மை. இது ஒரு வாழ்க்கையின் சட்டம்? ஆமாம், ஒருவனுக்கு ஒருத்தி என்ற சட்டத்தை மீறும்போதும், மனிதன் தன்னையுமறி யாமல் மிருக நிலைக்குத் தாவுகிறான் என்று அர்த்தம். இது காதலைப் பற்றி நமது மேலோர் கண்ட கோட்பாடு.

வேதாந்தமா?

பெரிய வேதாந்திகள் ‘யோசிக்கும் வேளையில் எல்லாமே ஒருபோது, உண்ணுவதும் உறங்குவதுமாக முடியும்’ என்பார்கள். ஆம். இந்த வேதாந்தம், யோசிப்பவர் களுக்குத் தானே. காதலை யாசிப்பவர்களுக்கு இது பொருந்துமோ? ஒருமுறை ஏதோ அறியாமல் ஒன்றுபட்டு விட்ட காதலர்கள், ஏழு பிறப்புகளிலும் ஒன்றாக வாழ அல்லவா விரும்புகிறார்கள். போகட்டும் வாழ்ந்து விட்டுப் போகட்டும், நமக்கென்ன?

வியாபாரமா?

“என்னய்யா இது? நகைச்சுவை ஆராய்ச்சி என்று காதலைப் பற்றி ஏதேதோ அளந்துகொண்டே போகிறீர். இந்த விஷயத்தில் உம்முடைய அபிப்பிராயத்தை சீக்கிரம் சொல்லித் தொலையும்” என்று நீங்கள் கேட்பதும், நம் காதில் விழுகிறது. நம்மைப் பொறுத்தவரை காதல் என்பது ஒரு எக்சேஞ்சு பிசினஸ். ஆம்! இது ஒரு இதயமாற்று. வியாபாரம். ஆம். இரண்டு உயிர்கள் இடத்தை மாற்றிக் கொள்ளும் இயற்கையின் பிசினஸ். வட்டியில்லாமல் வாங்கிய கடன். இரண்டு உயிர்கள் இடத்தை மாற்றிக் கொள்ளும் இன்பத்தின் இரகசியம் என்றெல்லாம்: கல்யாணம் ஆகுமுன்பு எழுதினேன்.

இப்போது அனுபவத்தின் அறிவு தந்த சாட்டை அடிகளால், அதாவது பட்டறிவு தந்த கட்டடிகளால்,