பக்கம்:சிரிப்பதிகாரம்.pdf/56

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

54

சிரிப்பதிகாரம்


ஆம். நம் பெண்ணரசியின் புன்னகை பொன்னகைக்குரிய விண்ணப்பம் என்று ஒரு நன்னகை ஆசிரியர் கூறுவதை மிகை எனக் கொள்ளாதீர்கள். பெண்ணொருத்தி நகைத்தால், ஆண் ஒருவனுக்கு அழுகை கட்டாயம் உண்டு என்பதைக் கூறாமல் கூறுகிறார் ஒரு பேராசிரியர்.

இந்த நன்னகை ஆசாமி, பிஞ்சிலே பழுத்தவராக இருக்கலாம். பிஞ்சிலே பழுத்தவர்களை விட்டுவிடுவோம். முதிர்ந்து பழுத்த முதுபெரும் ஆசிரியர்களையே எடுத்துக் கொள்வோமே.

பத்தரா பித்தரா! புத்தரா! சித்தரா?

மிகப்பிரபலமான மகாகவிஞர்கள்கூட, “காதல் என்பது பசிபிக் மகாசமுத்திரத்தைப்போல் ஆழமானது. அது. எவரெஸ்ட் சிகரம்போல் உயரமானது - நீளமானது - பரந்தது - விரிந்தது - திறந்தது - இப்படியெல்லாம் பேசும் மகாகவிகள் கூட, காதலர்களைப் பற்றிச் சொல்லும்போது, கற்பனை ஹாஸ்யமிக்க பைத்தியங்கள்” (The lunatic the lower and the poet are of imagination all compact - Shakespare) என்றுதான் புகழ்ந்துரைக்கிறார்கள். அதாவது “காதல் பக்தர், பித்தர் அதை எடுத்துரைக்கும் கவிஞர் ஆகிய எல்லாருமே ஒரே மாதிரியானவர்களே” என்கிறார் ஷேக்ஸ்பியர். இந்த மனுஷனே ரோமியோவை ஒரு பைத்தியக்காரக் கவிபோல் பேச வைக்கிறார் பாருங்கள்: “ஜூலியட்டின் உப்பரிகைதான் கீழ்த்திசை! அதிலிருந்து எட்டிப் பார்க்கும் என் ஜூலியட் தான், காலைக் கதிரவன்” என்கிறான் ரோமியோ, (Yonder the East Juliet the sun) என்கிறான். அவன் கொண்ட காதலின் கதகதப்பில் உதயமாகிறது காதலிய சூரியன். குளிர் தண் வெண்ணிலவான தளிர் மங்கை ஜூலியட், அவன் கண்ணுக்குக் காலைக் கதிரொளியாகக் காட்சி தருகிறாள்! இது ரோமியோ என்ற காதல் பைத்தியத்தின் வாயிலாக ஷேக்ஸ்பியர் தரும் மிகப்பெரிய நகைச்சுவையல்லவா!

பிரிந்தவர் கூடினால்?

பிரிந்தவர் கூடினால் பேசவும் வேண்டுமோ! “நோக்கு ஒக்கின் வாய்ச் சொற்கள் என்ன பயனும் இல” என்று நம்மைப்