பக்கம்:சிரிப்பதிகாரம்.pdf/58

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

22

சிரிப்பதிகாரம்


பாட்டைப் படிக்கும்போதே, பெண்வாசனையின் நெடி நெடுந்துரம் வீசுகிறது! திருமணங்களின் கதம்ப வாசனை, திணற வைக்கிறது. மானுட ரசகந்த மகத்துவம் மனிதனை திக்குமுக்காடச் செய்கிறது.

வாசனைக் கடல்!

அதாவது நிடத நாட்டின் கடல் எல்லாம் செண்டுக் கடலாக, (Sea of Scent) அதாவது, வாசனைக் கடலாக மாறி மணம் வீசுகிறதாம். அத்தர் - புனுகு - அரகஜா பன்னீர். சந்தனக் கலவை - சண்பக மணங்கள் - மகிழம்பூ, தாழை, மல்லிதை - முல்லை, அல்லி, வல்லி... இத்தனை மணமும் மெழுகாகி, ஒன்றாகத் திரண்டு உருண்டு கலந்து, சிறந்ததொரு வாசனை மலை ஆகிவிடுகிறது. அந்த நாட்டு அழகான மங்கையரும், மாதரும் மேற்கண்ட வாசனை மெழுகு மலையில் கொஞ்சம் எடுத்தெடுத்து தங்கள் அணியுடன் அப்பிக் கொள்கிறார்கள். அதன் வேலை தீர்ந்ததும், அத்தனை வாசனைக் கலவையும், அவர்கள் தினசரி குளிக்கும் ஆறுகளில் கலந்து விடுகிறதாம். அந்த ஆறுகள் எல்லாம் வாசனை ஆறுகளாக மாறி, கடலில் கலக்கின்றனவாம். அதனால் நிடதநாட்டின் கடல் எல்லாம் (Perfumed ocean) வாசனைக் கடலாகி விடுகிறதாம். என்ன அநியாயமய்யா இது. ‘பொய் சொல்லுவதற்கும் ஒரு எல்லை வேண்டாமா? என்று அலுத்துக் கொள்ளாதீர்கள். மனுசன் படும் வேதனைக் கடலைத் தெளிவிக்க, கவிஞன் ஒரு வாசனைக் கடலைத் தன் கற்பனை வானில், கவிதா பிரபஞ்சத்தில் படைத்துக் காட்டுகிறான். பொய் சொல்லுவதால் அதி வீரராம பாண்டியனுக்கு ஒன்றும் லாபமில்லை. லாபம் ரசிக சிகாமணிகளாகிய நமக்குத்தான்! இது கருப்புப்பண லாபமில்லை! நல்லதொரு கவிதையில் வந்துள்ள கற்பனை லாபம்! அனுபவியுங்கள்.

நாலும் தெரிந்தவர்!

காதலை நாலுமறிந்தவர்கள் சிங்கார நகைச்சுவை என்பார்கள். நாமும் நாளைக்கு அந்த நாலுமறிந்த நாலு