பக்கம்:சிரிப்பதிகாரம்.pdf/6

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது
கவிஞர் எஸ்.டி. கந்தரம் அவர்களின்
வாழ்க்கை குறிப்பு
பிறப்பு : 22.07.1921
ஊர் : சேலம் மாவட்டம் ஆத்தூர்
தந்தை : துரைசாமி அய்யா.
தாய் : பூங்கோதை, அம்மாள்
படிப்பு : 1933-இல் நவாப் இராஜமாணிக்கம் நாடகக் குழுவில் சேர்ந்தார். ஆத்திச்சூடி, கொன்றை வேந்தன். பட்டினத்தார் பாடல்கள், வள்ளலாரின் திருவருட்பா மனப்பாடம், இவரது தமிழ் புலமையைக் கண்ட நவாப் இராஜமாணிக்கம் அவர்கள் 1934-ஆம் வருடம் திருவையாறு அரசுக்கலைக் கல்லூரியில் சேர்த்தார். தமிழ் வித்வான் படிப்பில் முதல் வகுப்பில் தேர்ந்தார்.
குடும்பம் : 1948-இல் திருமணம் மனைவி எஸ்.டி.எஸ். ஜெயலட்சுமி அம்மாள். திரு. டாக்டர் மு. வரதராஜன் அவர்களின் தலைமையில் திருமணம் நடைப்பெற்றது. (ஒரு மகளும் மூன்று மகன்களும் வாரிசாக உள்ளனர்.
1942 : போராட்டத்தில் கலந்து கொண்டதற்காக தஞ்சையில் 9 மாதம் சிறைச் சென்றார்.
1943 : மீண்டும் நவாப் இராஜமாணிக்கம் நாடக கம்பெனியில் சேர்ந்தார்.
1945 : சக்தி கிருஷ்ணசாமியும், கவிஞரும் சேர்ந்து குருநாதர் ஆசியுடன் “சக்தி நாடக சபா”வில் சிறையிலிருந்த போது எழுதிய “கவியின் கனவு” என்ற நாடகத்தை அரங்கேற்றி புகழின் உச்சிக்கு சென்றார். இதில் நடிகர் திலகம் திரு. சிவாஜிகணேசன், திரு. எம்.என். நம்பியார், திரு. எஸ்.வி. சுப்பையா போன்றோர்கள் முக்கிய பாத்திரங்களில் அறிமுகமாகி புகழ் பெற்றனர். சுமார் 1500-க்கும் மேல் நாடகம் நடத்தப்பட்டது.