பக்கம்:சிரிப்பதிகாரம்.pdf/60

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

58

சிரிப்பதிகாரம்



ஒரு பெண்ணின் முந்தானையப் பிடித்துக்கொண்டு அலைபவனுக்குப் பெயர் கதாநாயகனாம்! அந்தக் கதாநாயகனது வாலைப் பிடித்து இழுப்பவன் வில்லன்! இந்த வில்லனது காலைப் பிடித்திழுப்பவன் காமெடியன்! காமெடியன் தோலை உரித்துக்காட்டி ஒப்பாரி வைப்பவள் தோழி! அதாவது காமெடியனி. இப்படி ஓய்ந்து அறுதப் பழசாய்ப்போன முறைகளை, மீறியும் ஒரு சில நல்ல நாடகங்கள் உதயமாகின்றன. ஆனால் நம்ம வாடிக்கை ரசிகர்களுக்கு பழரசனை மாறும்வரை இத்தகைய நாடகக் காட்சிகளில், ‘காதல்’ என்ற பெயரில் வரும் கேலிக்குரிய சிரிப்புக் காட்சிகளைக் காணத்தான் வேண்டும். இது ரச ஆராய்ச்சியின் தலைவிதி. நமது நாடகக் கலையின் கதி என்ற தைரியத்துடன் இதையெல்லாம் ரசிப்போம்! அப்போதுதான் காலத்துக்குரிய நாடகத்தை நம்மால் ஆக்கமுடியும்.

சிலப்பதிகாரக் கோவலனும், மணிமேகலையில் வரும் உதயகுமாரனும், குண்டலகேசியில் வரும் சத்துகனும் கதாநாயகர்கள் எப்படி இருக்கக் கூடாது என்பதற்கு உதாரணங்களாக இருக்கிறார்கள். அதாவது (Negative characters) பெண் பிள்ளையைச் சுற்றிக் கொண்டும், கடைசியில் அதற்காகக் கண்ணீர்க் கடலில் விழுபவனும் ஹீரோ அல்ல! சுத்த கோழைப் பயல்கள்! கடமை, கண்ணியம், கட்டுப்பாடில்லாமல், முன் ஜன்மம் என்ற அழுமூஞ்சி விதிக்கு அடிமைப்பட்ட கோழைப் பயல்களுக்கு உதாரணம் இந்த மூவரும் வீரமிக்க தமிழகத்தில், இப்பேற்பட்டவர்களும்.இருந்தார்களே என்று நாமெல்லாம் எண்ணி வருந்துவதற்காகவே எழுதி வைக்கப்பட்ட பாத்திரங்கள்! இவர்கள் ஊர் சிரிக்க வாழ்ந்தவர்கள். உளம் சிரிக்கத் தெரியாதவர்கள். ஆகையால் இவர்களைப் பார்த்து நாமும் சிரிக்கலாம். சரி - சரி ஆராய்ச்சி போதும். இனி நாடகக் காட்சிகளைக் காண்போம்!

‘காட்டுவித்தால் யார் ஒருவர் காணாதாரே!
ஆட்டுவித்தால் யார் இருவர் ஆடாதாரே...!