பக்கம்:சிறந்த பதின்மூன்று சிறுகதைகள் (மொழிபெயர்ப்பு).pdf/45

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

அருகில் கொண்டு வந்தான். ஊன்றுவதற்காக ஒரு கையால் கிளைகளில் ஒன்றைப் பிடித்தபடி, மறு கையைச் சீதாவிடம் நீட்டினான்.

அவள் அவன் கையைப் பற்றி படகுக்குள் நழுவினாள். அவன் தன் காலை அடிமரத்தில் ஊன்றி, படகைத் தள்ளினான்.

சின்னப் படகு ஆற்றோடு வேகமாய்ப் போனது. பெரிய மரம் மிகப் பின்தங்கிவிட்டது. சீதா அதை மறுபடி பார்க்கவே மாட்டாள்.

***

அவள் படகில் படுத்துக் கிடந்தாள். பேச இயலாதபடி பயந்திருந்தாள். பையன் அவளைப் பார்த்தான். ஆனால் ஒன்றும் சொல்லவில்லை. அவன் புன்னகை புரியவுமில்லை. அவன் தனது இரு சிறிய துடுப்புகள் மீதும் கவிழ்ந்து, படகு நடு ஆற்றுக்குப் போய்விடாதபடி கவனமாக, நிதானமாகத் தள்ளினான். படகு வேக நீரோட்டத்தில் செல்லாது தடுப்பதற்குப் போதிய பலம் அவனுக்கில்லை. ஆனாலும் அவன் பெரிதும் முயன்றான்.

அவன் இறுதியில், துடுப்புகளை நிறுத்திவிட்டுச் சொன்னான்: "நீ தீவில் தானே வசிக்கிறாய் சில நேரங்களில் நான் உன்னை பார்த்திருக்கிறேன். மற்றவர்கள் எங்கே? அவன் படகைச் சற்றே அதன் போக்கில் விட்டிருந்தான். ஏனெனில், ஆற்றின் அதிக விசாலமான, அதிக அமைதியுள்ள பரப்பை அடைந்திருந்தான்.

"என் பாட்டிக்கு சீக்கு, தாத்தா அவளை ஷாகன்ஞ்சில் இருக்கும் ஆஸ்பத்திரிக்குக் கூட்டிப் போயிருக்கிறார்" என்று சீதா சொன்னாள்.

"நீ எங்கிருந்து வருகிறாய்" என்று கேட்டாள். ஏனெனில் அவள் அவனை இதற்கு முன் பார்த்ததேயில்லை.

"மலையடிவாரத்தில் ஒரு ஊரிலிருந்து ஊரில் வெள்ளம் புகுந்து விட்டது என்பதை ஆற்றின் அக்கரையில் இருப்பவர்களிடம் சொல்வதற்காக நான் என் படகில் வந்தேன். ஆனால் நீரின் வேகம் வெகு அதிகம். அது என்னை உன் தீவுக்கு அருகாக இழுத்து வந்தது. நாம் ஆற்றுடன் போராட முடியாது. அது நம்மை எங்கே எடுத்துச் செல்கிறதோ அங்கே போக வேண்டியது தான்."

அவன் ஒரு துடுப்பைப் பற்றியிருந்தான். மறுகையால் இருப்பிடத்தின் கீழே துழாவினான். அங்கு சிறு கூடை இருந்தது. அதிலிருந்து இரண்டு மாம்பழங்கள் எடுத்தான். ஒன்றை சீதாவுக்குக் கொடுத்தான்.

பழுத்து சதையோடிருந்த மாம்பழங்களை அவர்கள் கடித்துச் சுவைத்தார்கள். பற்களால் தோலை அகற்றினார்கள். இனிய சாறு அவர்கள் மோவாய் வழியே சொட்டியது. பழத்தின் வாசனை ரம்மியமாக இருந்தது. சீதா மாம்பழம் தின்று ஒரு வருடத்துக்கு மேலாகியிருந்தது. சில

41