உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:சிறந்த வாழ்வுக்குச் சில யோசனைகள்.pdf/10

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.
சிறந்த வாழ்வுக்குச்
சில சிந்தனைகள்
சீரிய சிந்தனை

நீயே நினைத்துப் பார்! மனிதனே! இங்கு நீ எங்கிருந்து வந்தாய்?

உனக்கு இருக்கும் ஆற்றலை எண்ணிப் பார். உன் தேவைகளுக்கும் உனக்கும் உள்ள தொடர்பைப் பற்றிச் சிந்தனை செய்.

உன் வாழ்க்கையில் நீ செயலாற்ற வேண்டிய கடமைகள் உனக்கே புலப்படும். அந்தக் கடமைகளை நிறைவேற்றுவதற்கான வழிமுறைகளும் உனக்கு விளங்கும்.

பேசுவதற்கு முன் நீ, என்ன பேசுகிறோம் என்பதை நன்கு எண்ணிப் பிறகே பேசு. எதையும் செய்வதற்கு முன் ஆய்ந்து செய். அவமதிப்பும், தலை இறக்கமும் உனக்கு ஏற்படாதிருக்க அதுவே வழி. நீ யாரிடமும் வருத்தப்படவோ, மன்னிப்புக்

சி-1