பக்கம்:சிறந்த வாழ்வுக்குச் சில யோசனைகள்.pdf/100

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

த. கோவேந்தன்

99

அதை நீ சரியாகச் செய்திட உறுதி கொள்ள வேண்டும். இடர்களை ஏற்றுத்தான் புகழ் பெற வேண்டும் என்று கருதாதே. சிக்கல்களை ஏற்றுத் தான் புகழ் பெற வேண்டும் என்பதில்லை.

மங்கைக்குக் கவர்ச்சிமதிப்புத் தானாக வருவது போல், நீ ஒழுக்கத்துடன் நேர்மையாக நடந்தால் பெயரும் புகழும் தாமாக வரும்.

புகைக்காக வெறி பிடித்து அலைவது வன் முறைகளுக்கு வழி வகுக்கும். நாட்டுக்காகத் துணிந்து எதையும் செய்ய ஆயத்தமாக வேண்டும். நல்ல குடிமக்களின் நலன் காப்பது குறிக்கோளாக இருக்க வேண்டும். ஏன் அந்த மனிதருக்குச் சிலை இல்லை என்று மக்கள் பேசிக்கொள்ள வேண்டும். உன் நடத்தை அப்படி இருக்கட்டும். உயர்வான ஆசை கொள்வது எல்லோருக்கும் இயற்கை நெஞ்சத்தில் குடி கொண்டிருப்பதே மேன்மை. உன்னை நீ நல்ல செயல்களுக்காக ஒப்படைத்துக் கொள். இரண்டகத்தார் உள்ளத்தில் பேராசை குடிகொண்டிருக்கும்.

எந்த நிலையிலும் பாம்பு நஞ்சைக் கொட்டிக் கடிக்காமல் இருக்காது. அப்படிப்பட்ட பாம்பைக் காப்பாற்றப் பால் கொடுத்தாலும் அது உன்னைச் சாகடிக்கும் போக்கைக் கைவிடாது.

பெண்ணின் ஒழுக்கத்திற்கு மதிப்பளிப்பவன் மனிதன். பெண்கள் கணவனின் நன் மதிப்பை இழப்பது வேதனைக்கு உரியது.