பக்கம்:சிறந்த வாழ்வுக்குச் சில யோசனைகள்.pdf/101

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

100

சிறந்த வாழ்வுக்குச் சில சிந்தனைகள்

செங்கதிர் உயர உயர நிழல் குறைகிறது. அதைப்போல ஒருவரிடம் நல்லது அதிகரிக்கும் போது பாராட்டுகளை விரும்பாது இருக்க வேண்டும். அதனால் உனக்குப் பலன் உண்டாகியே தீரும். பிறருடைய மதிப்பை நீ அடைந்தே தீருவாய்.

புகழைத் தேடி அலைபவனிடம் அது நிழல் போல் மறைய முற்படும். புகழை விரும்பாதவனின் காலடிகளைத் தேடி அந்தப் புகழ் பின் தொடரும். தகுதி இல்லாத நிலையில் அடையும் புகழ் மறைந்து விடும். புகழைத் தேடாதவனிடம் அது நீடித்து நிலைநிறுத்திக் கொள்ளும்.

அறிவியல் கல்வி

மனிதன் எவ்வாறு நடந்து கொள்கிறான் என்பதிலிருந்து அவனைப் படைத்த இயற்கை பற்றிப் பலவும் தெரிந்துகொள்ளலாம். இயற்கையின் அறிவியல், பல வியக்கத்தக்க உண்மைகள் வெளிப்படுகின்றன. இயற்கையின் சாதனைகள் போற்றத்தக்கவை. முகில் மண்டலத்தைக் காணும் போது நமக்கே பல சிந்தனைகள் தோன்றுகின்றன.

செங்கதிர், இருக்குமிடத்தில் இருந்துகொண்டு பலவற்றை இயக்குகிறது. நிலத்தில் வகை வகையான பொருள்கள் விளைகின்றன. அவை அழகு, டையதாவும் இருக்கின்றன. பயனுள்ளதாகவும் இருக்கின்றன. விலங்குகளுக்கு வேண்டிய தீனியும்