பக்கம்:சிறந்த வாழ்வுக்குச் சில யோசனைகள்.pdf/102

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

த. கோவேந்தன்

101

விளைகிறது. மனிதர்களுக்கு வேண்டிய உணவுப் பொருள்களும் விளைகின்றன. எல்லோருமே உண்டு களித்து வாழ்கிறார்கள். ஒன்று மற்றொன்றிற்கு உதவி புரிகிறது. எங்கும் இன்பம் நிலவுகிறது.

இயற்கையின் அருஞ்சிறப்பு அறிவியல் அறிவு கொண்டவர்களுக்குப் புரியாமல் இருக்க வழியில்லை. இயற்கையை வணங்குவதும் கடமையாகும்.

வாழ்வதா இறப்பதா-அதிகாரம் செலுத்துவதா, பணிவதா-செயல்படுவதா, சோம்பிக் கவலைப்படுவதா என்பதை நீயே சிந்தித்து முடிவு கொள்ள வேண்டும். நீ பெற்ற அறிவை உன் நன்மைக்குப் பயன்படுத்து. மேலும், அறிவு பெற்று, நல்லவனாக, சான்றோனாக வாழமுற்படு.

வளமையும் வறுமையும்

அளவிற்கு மீறிய வளத்தைப் பெற்றிட ஆசைப்படாதே. உனக்குப் போதிய வளம் காண முடியவில்லை என்றால் மனவேதனை அடையாதே.

முன்னேற்றத்தைக் கண்டு இகழக் கூடாது. எதுவும் நிலைத்து இருக்கும் என்று நம்பிக்கை கொள்ளாதே. எந்த நிலையிலும் பொறுமையைக் கடைபிடித்து வாழக் கற்றுக்கொள்.