பக்கம்:சிறந்த வாழ்வுக்குச் சில யோசனைகள்.pdf/104

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

த. கோவேந்தன்

103

வரக்கூடிய இடர்களை அவன் சிந்திப்பதில்லை. பலரை நம்புகிறான். ஏமாற்றம் உண்டாகி வளத்தை இழக்கிறான். வளமாக இருக்கும்போது உண்மை எதுவும் புலப்படுவதில்லை.

வேதனையோடு மனிதனுக்கு மன நிறைவு இருந்தால் போதுமானது. இன்பம் மனிதனைப் பல கவலைகளில் திணித்து திண்டாட வைக்கிறது.

எனவே, நீ உன் வாழ்நாள் முழுவதும் எப்போதும் நேர்மையுடன் நடந்துக்கொள். மாற்றங்களைக் கண்டு கலங்கிடாதே. எது நேர்ந்தாலும் உனக்கு எல்லோருடைய மதிப்பும் மரியாதையும் நீடித்து இருக்கும். அறிவாளி எந்த நிலையையும் தனக்கு ஆதரவாகப் பயன்படுத்திக் கொள்வான். நல்லனவற்றைக் கட்டுக்குள் வைத்திருப்பான். தீமைகளை விரட்டி வெற்றியைக் காணுவான்.

முன்னேறிய நிலையில் ஊகங்களில் ஈடுபடா மலும், வறுமையில் சோர்ந்து விடாமலும் இருந்தால் தொல்லைகள் ஏதும் வராது. உன்னோடு நிலைத்து இருக்க முடியாதவற்றைந் தேடிக் கொள்ள ஆசைப்படாதே. வறுமையிலும் நம்பிக்கையை இழக்காதே. வழியில் குழி வெட்டப்பட்டிருக்கிறது என்பதை உணராதவன் அதே குழியில் விழுந்தழிவான்.

மலை மீதிருந்து பாய்ந்து வரும் நீர் நெடுகப் பல நல்ல காரியங்களைச் செய்துவிட்டு கடலில்