பக்கம்:சிறந்த வாழ்வுக்குச் சில யோசனைகள்.pdf/12

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

த. கோவேந்தன்

11

மில்லை! எந்த நேரமும் நீயும் இறப்பைச் சந்திக்க வேண்டியவனே என்பதை மறக்காதே.

எளிய ஆடை எப்படி ஒரு பெண்ணை அழகுபடுத்துகிறதோ, அதைப் போலவே எளிமையான தடத்தையும் அறிவிற்கு அழகு செய்திடும்.

அடக்கமுள்ளவன் பேச்சில் உண்மை ஒளி வீசும், தன்னம்பிக்கையை மிக அதிகப்படுத்தும். குற்றங்கள் எதிலும் நாட்டம் கொள்ளாது. அப்படிப்பட்டவன் நண்பர்களின் நல்ல அறிவுரைகளை ஏற்று நடப்பான். அதனால் பல நன்மைகளையும் பெறுவான்.

அடக்கம் உள்ளவன் தற்புகழ்ச்சி கொள்ளான். பாராட்டுகளை ஏற்று மயங்கிவிடான். தன்னைப் பற்றித் தானே முழுமையாக உணர்ந்து கொள்வான். எப்படி ஒரு முக்காடு பெண்ணுக்கு மேலும் அழகை உண்டாக்குகிறதோ அதைப்போல அவனுடைய ஒழுக்கம் அவனுக்கு நன்மை தரும்.

செருக்குப் படைத்தவனைப் பார். அவன் அணிந்துள்ள ஆரவார ஆடைகளைப் பார். அவன் பொது இடங்களில் நடந்து கொள்வதைக் கவனி. கண்ட பெண்களை எல்லாம் அவன் கவர்ந்திட கண்கள் உருட்டுவதைப் பார். ஏழைகளைக் கண்டால் அவன் ஏளனமாகப் பார்ப்பதைப் பார். தன் கீழ் உள்ளவர்களைப் புறக்கணித்துப் வாழ்பவர், இவனைவிட உயர்ந்தவர்கள் அவனுடைய செருக்கையும் சிரிப்பையும் கண்டு குற்றம் காண்பதைப் பார்.