16
சிறந்த வாழ்வுக்குச் சில சிந்தனைகள்
கடறும் போக்கைக் கொள்வான். யாருக்கு என்ன தீங்கு செய்திடலாம் என்றே அவன் நினைப்பான். இறுதியில் அவன் தானே பின்னிக்கொண்ட வலை யில் சிலந்திபோல மடிவான்.
முன் அறிவு
நல்ல அறிவுரைகளைக் கேட்டு, நீ உன் மனத்தில் பதிய வைத்துக் கொள். நல்ல நெறிகள் உலகம் முழுவதும் காணப்படுகின்றன. நல்ல. ஒழுக்க அறிவை மனத்தில் தேக்கி வைத்திரு. உன் வாழ்வில் முன்னேற முன் எச்சரிக்கையாக அனைத்துச் சிறந்த கருத்துகளையும் திரட்டி வைத்துக் கொள்.
நாவடக்கத்தைக் கொண்டிரு. உதடுகளுக்குக் காவல் அமைத்திடு. இல்லையேல் உன் பேச்சே உன் அமைதியைக் குலைத்துவிடும்.
நடமாட முடியாத நொண்டியை இகழ்பவன் தான் மேற்கொண்டு முன்னேற முடியாது தடுக்கப்படுவான். பிறரைக் குறை கடறுபவன், தன்னைப் பற்றிப் பிறர் கடறுவதைக் கேட்டு மனம் நோக நேரிடும்.
அதிகம் பேசுபவன் வருத்தம் தெரிவிக்க வேண்டிவரும். நாம் அமைதியைக் காப்பதில்தான் பாதுகாப்பு அடைய முடியும்.
வாயாடி சமூகத்திற்கே தொல்லை தருபவன். அவன் பேசுவதைக் கேட்கக் காதுகள் மரக்கும்.