த. கோவேந்தன்
17
அவனுடைய உளறல் மொழிகள் யுரையாடுபவர்களுக்குச் சீற்றத்தை உண்டாக்கும்.
உன்னைப் பற்றி நீயே வெறும் தற்புகழ்ச்சி கொள்ளாதே. அது உனக்குப் பிறருடைய வெறுப்பைத்தான் தேடித்தரும். நீ பிறரைக் குறை கூறாதே. அது உனக்கு அல்லலாக முடியும்.
குறும்புப் பேச்சு நம் நட்பை முறிக்கும். நாவடக்கம் இல்லாதவன் தொல்லைகளைத் தானே தேடிக் கொள்வான்.
உன் நிலைக்கு ஏற்ற ஏந்துகளை அமைத்துக் கொள். உன் ஆற்றலுக்கு மீறிப் பணத்தைச் செலவிட்டு எதையும் பெற்றிட நினைக்காதே. அதுவே துன்பத்திற்குப் பாதை அமைத்துக் கொண்டதாகிவிடும். இளமையில் முன் எச்சரிக்கையுடனும், சிக்கனத்துடனும் வாழ்வதே, முதிய வயதில் நிறைவான வாழ்வைத் தரும். உன் வேலைகளில் அக்கறை செலுத்து. மற்றவற்றை நாடாளும் நல்ல வர்களுக்கு விட்டுவிடு.
பொழுதுபோக்கிற்காகப் பணத்தை வீணாக வாரி இறைத்து விடாதே. அதனால் நீ பெறும் மகிழ்ச்சி இறுதியில் தடைபடும். செல்வனாகி விட்டதால் எதையும் காணத் தயங்காதே. சிக்கனத்தின் பெயரால் முறையான செலவுகளைத் தவிர்த்து விடாதே. வரை கடந்த தேவையை வளர்த்துக் கொள்பவன், ஒரு காலத்தில் இன்றி-