த. கோவேந்தன்
19
முட்டாள்களுக்குத் தொடர்ந்து இன்பம் இருப்பதில்லை. அறிவாளிகளுக்கு எப்போதும் இன்பம் கிட்டாது போவதில்லை.
உறுதி கொள்
உலகில் ஒவ்வொரு மனிதனும் இடர்கள்' கேடுகள், இல்லாமை, வலி, தொல்லை, பிணி' காயம் போன்றவற்றைத்தான் எதிர்கொள்ள வேண்டியிருக்கிறது.
எனவே, நீ தொடக்கத்திலேயே மன உறுதி கொண்டுவிடுக. உனக்கு எது நேரிட்டாலும் அதைத் துணிவோடு எதிர்கொள்ள ஆயத்தமாகிவிடு.
பாலைவனத்தில் பாடுபடும் ஒட்டகம் பசி, வேட்கை, வெயில் கொடுமையைத் தாங்கிக் கொண்டுதான் பயணம் செய்கிறது. எதற்கும் அது அஞ்சி மயக்கமடைவதில்லை. நீயும் ஒட்டகத்தைப் போல எதையும் நேர்கொள்ள உறுதியாக இரு தாக்கிடும் அலைகளால் ஏதும் செய்திட இயலாது.
மலையின் மீதுள்ள மின்விளக்கைப் போலத் தலையை நிமிர்த்தி நட. நல்லது நடக்கும். தன்மைகள் அம்புகளைப் போலக் காலடியில் குவியும்.
அல்லல் வந்து விட்டதே என்று அஞ்சாதே. உன் நெஞ்சத்தில் குடிகொண்டுள்ள துணிவு