உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:சிறந்த வாழ்வுக்குச் சில யோசனைகள்.pdf/21

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

20

சிறந்த வாழ்வுக்குச் சில சிந்தனைகள்

உன்னைக் காத்திடும். நீ பெற்றுள்ள அறிவு அல்லலை அண்ட விடாது.

மனிதனுக்கு ஏற்படக் கூடிய எந்தக் கேடு உனக்கு வந்தாலும் நீ போரிட்டு அந்தக் கேட்டைத் தவிர்த்துக் கொண்டு, வெற்றி காண்பாய்.

தொடர்ந்து கேடுகள் வந்தாலும் உன் அமைதி தான் ஒரளவிற்குக் குறையுமே தவிர, இறுதியில் நீ வெற்றி காண்பாய்.

பொறுமையற்ற அறிவும், முரட்டுத்தனமும் 'உனக்கு மானக்கேட்டைத் தேடித் தரும்.

வறுமை வரும்போது செயலற்றுக் கிடப்பவன் இழிவான செயல்கள் செய்திட தூண்டப்படுவான். ஊரார் பழிப்புக்கு ஆளானவன் உதைப்பட நேரும். காற்று வீசும்போது நாணல் அசைவதைப் போல, கேடுகள் வரும்போது மனிதன் நடுக்கம் கொள்வான்.

இக்கட்டான காலத்தில் மனிதன் எதைச் செய்வது, எப்படிச் செய்வது என்பது புரியாத நிலையில் தொல்லையடைகிறான். அவன் நெஞ்சத்தில் நம்பிக்கை அற்றுப் போகிறது.

மன நிறைவு

மனிதா! தறந்து விடாதே!