பக்கம்:சிறந்த வாழ்வுக்குச் சில யோசனைகள்.pdf/23

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

22

சிறந்த வாழ்வுக்குச் சில சிந்தனைகள்

பிதற்றித் திரியாதே. அதை எல்லாம் அதிகமாகப் படைத்தவர்கள் பலர் பல வகையான தொல்லைகளுக்குத்தான் இலக்காகி இருக்கின்றனர் என்பதை மறந்து விடாதே.

பணக்காரனின் ஆசைகளும், அதனால் அவன் அடையும் அல்லலையும் ஏழை அறிய மாட்டான். அதிகாரத்தைக் கையில் வைத்திருப்பவர்கள் எப்படிப்பட்ட அதிர்ச்சிகளை அடைகிறார்கள் என்பதை ஏழை மக்கள் அறியமாட்டார்கள் அதனால்தான் தம் நிலையை நினைத்துப் பெரிதும் கவலை கொள்கிறார்கள்.

எனவே, செல்வர்களைப் பார்த்துப் பொறாமைப்படாதே. அவன் துன்பத்திற்கு என்ன காரணம் என்பதை உனக்குத் தெரிந்திருக்க வழியில்லை.

உள்ளதைக் கொண்டு மனநிறைவு கொள்வதே அறிவுடைமை. எவன் ஒருவன் செல்வத்தை, மிகுதியாக்கிக் கொள்கிறானோ, அவனுக்குக் கவலைகளும் அதிகரிக்கும். எப்போதும் மனநிறைவோடு வாழ்வதில் தான் பெரும் செல்வம் அடங்கி இருக்கிறது. அப்படிப்பட்டவனுக்குத் துன்பம் உண்டாவதில்லை. நல்லவனாகவே வாழ்வதே மனிதர்களுக்கு இயற்கை வைத்துள்ள போட்டி. அதுவே, மகிழ்ச்சியடைவதற்கு வழி. மனநிறைவு கொண்டவனே அந்தப் போட்டியில் வெற்றியைக்