உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:சிறந்த வாழ்வுக்குச் சில யோசனைகள்.pdf/25

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

24

சிறந்த வாழ்வுக்குச் சில சிந்தனைகள்

அதன் விளைவாகப் பல பிணிகளுக்கு ஆளாகி இறப்பைத் தழுவிக் கொள்ள நேரிடும்.

அப்படிப்பட்ட இன்பத்தைத் தேடி அலைந்தவர்கள், அதில் மயங்கி விட்டவர்கள் எந்த நிலையை அடைந்துள்ளனர் என்பதைப் பார்த்துப் புரிந்து கொள். அவர்கள் பெரும் எண்ணிக்கையில் இல்லை. அவர்கள் நோய் வாய்ப்பட்டு, உணர் விழந்து கிடப்பதையும் பார்த்துத் தெரிந்து கொள், அவர்கள் கண்ட இன்ப நலம் சிலமணி நேரம். ஆனால் அவர்கள் தாங்க முடியாத தவிப்பைத் தொடர்ந்து நுகர்ந்து வாழ்வில் வெறுப்பை அடைகிறார்கள். அந்த இன்பத்தைச் சுவைத்தவர்கள் பிற எந்த நல்லதையும் மனைவியிடம்கூட நுகர முடியாத நிலையை அடைகின்றனர். அந்த இன்பமே அவர்களைப் பழிவாங்கி விடுகிறது. இயற்கை அருளியதைத் தவறான முறையில் பயன்படுத்துபவர்களை இப்படித்தான் அவள் தண்டிக்கிறாள்.

ஆனால், நிலையான இன்ப உலகிற்கு மனிதனை அழைத்துச் செல்வது எது?

உடல் நலத்தைப் பாதுகாத்துக் கொண்டால் கன்னங்கள் செம்மலர் போல ஒளி கொண்டிருக்கும். நல்ல உடல் நலமே இன்பத்தை அளிப்பதாகும்.

அந்த உடல்நலம் என்பது உடற்பயிற்சியின் மகன். தன்னடக்கமே அது தரும் பரிசு. அந்த