த. கோவேந்தன்
25
உடல் நலத்தின் பிறங்கடைகள் துணிவையும் வீரத்தையும் ஒழுக்கத்தையும் தரக் கூடியவர்கள்.
உடல்நலம் கொண்டவர்களின் நரம்புகள், -எலும்புகள் நன்றாக இருக்கும். நன்றாக உழைக்கக் கூடிய ஆற்றல் பெற்றிருப்பார்கள். அவர்கள் உணர்வுகளைக் கட்டுப்படுத்திக் கொண்டு, கெட்ட பழக்கங்களிலிருந்து தங்களைக் காத்துக் கொண்டு புகழ் அடைவார்கள். அவர்கள் நல் இன்பத்தையே அடைவார்கள். சிறிது நேரமே உறங்கு வார்கள். நல்ல உறக்கம் அவர்களுக்குப் புதிய தெம்பைத் தருகிறது.
அவர்கள் நல்ல உறுதி கொண்டவர்கள். கூர்மையான சிந்தனை ஆற்றல் பெற்றவர்கள். மருத்துவர்களுக்கு அவர்களிடம் வேலை இல்லை.
தீயவர்களின் நட்பின் காரணமாகவே அவர்களுக்குத் தீமை உண்டாகக் கூடும். அவர்களின் இரண்டகச் செயலால் மட்டுமே இவர்களின் உடல் நலத்திற்கு இன்னல் உண்டாகக் கூடும்.
அவர்களின் உடல் நலத்தையும் வலிவையும் அழகையும், நடத்தையும் கண்டு காமவல்லி மகிழ்கிறாள். அவள் அணியும் ஆடைகள் கவர்ச்சியானவை. அவளின் கண்களோ ஈர்ப்பானவை. அவளின் பார்வை காதலுக்கு விடும் தூதுகள். அவளின் ஆசை மொழிகள் மயக்கிடும் ஆற்றல் கொண்டவை. ஆகவே நீ எச்சரிக்கையாக இரு.
சி-2