பக்கம்:சிறந்த வாழ்வுக்குச் சில யோசனைகள்.pdf/32

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

த. கோவேந்தன்

31

உணர்ச்சி வயப்பட்டு எதையும் செய்திடாதே. அதனால் நீ கடும் புயலில் கடலில் சிக்கியவன் போலத் தவிக்க நேரிடும். உன் சீற்றத்தைக் கிளரக் கட்டியவர்களை நேர் காணாதே. துடுக்குடன் உன்னிடம் பேசுபவர்களிடமிருந்து நீ ஒதுங்கி இரு. அகந்தை கொண்டவர்கள் ஆத்திரத்தை உண்டாக்கக் கூடிய முறையில் நடந்து கொள்வார்கள் என்பதை மறக்காதே. முட்டாள்கள் தாம் அதற்கு இலக்காகி விடுவர். அறிவாளிகள் அதைக் கண்டு சினம் கொள்ள மாட்டார்கள். சிரித்துக் கொண்டே புறக்கணித்து விடுவார்கள்.

வஞ்சக எண்ணம் ஒரு போதும் உன் நெஞ்சத்தில் இடம் பெறக் கூடாது. அது உன் உள்ளத்தை எப்போதும் வாட்டி வதைத்துக் கொண்டே இருக்கும்.

எப்போதும் யாரையும் மன்னிக்கும் மனப்பான்மை கொண்டிரு. பழி தீர்த்துக் கொள்ள வேண்டும் என்று உறுதி கொள்வதும், அதற்கான சமயம் எப்போது வரும் என்று தேடிக் கொண்டிருப்பதும் கூடாது. அதனால் உனக்கே நீ துன்பத்தையும், தொல்லைகளையும் தேடிக் கொள்ள நேரிடும்.

ஆத்திரப்பட்டுச் சினத்துடன் பேசுபவர்களிடம் நயமாக இன்முகத்துடன் பேசுவதே நல்லது. தண்ணிரைக் கொண்டு தணலை அழிப்பதுபோல பிறரின் சினத்தை உன் நன் மொழிகள் அழித்து