உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:சிறந்த வாழ்வுக்குச் சில யோசனைகள்.pdf/34

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

த. கோவேந்தன்

33

பிறருடைய துன்பத்தையோ, துயரத்தையோ, ஏழையையோ கண்டு கவலைப்பட மாட்டார்கள்.

ஆனால், இரக்கம் கொண்டவர்கள் பிறரின் துன்பத்தைத் தனக்கு ஏற்பட்ட துன்பமாகக் கருதிக் கண்ணிர் விடுவார்கள். அவர்கள் சிந்திடும் கண்ணிர் மலர்கள்மீது விழும் பனித்துளிகள் போல இனிமையானவை.

எனவே, ஏழையின் குரலைக் கேட்பதற்குத் தயங்காதே. அப்பாவி மக்களின் அல்லலைக்கண்டு உன் உள்ளத்தைக் கல் ஆக்கிக் கொள்ளாதே.

ஏதிலர்களுக்கும், ஆதரவற்றவர்களுக்கும், வாழ்விழந்த விதவைகளுக்கும் அன்புக் கை நீட்டி, ஆறுதல் மொழி புகன்று, இயன்ற உதவியைச் செய்திடத் தயங்காதே.

ஆடையின்றித் தெருவில் நாடோடிகளாகத் திரிபவர்களுக்கும், ஆதரவற்ற நி ைல யி ல் குளிரிலும் மழையிலும் நடுங்கும் ஏழைகளுக்கும் மனம் திறந்து உன்னால் இயன்ற உதவியைச் செய்து வாழ வைத்திடு.

ஏழைகள் நோய் வாய்ப்பட்டுப் படுக்கையில் புரண்டு கிடக்கும்போது இருண்ட இருட்டு அறைகளில் எண்ணற்றவர்கள் அல்லல்படும் போது, அவர்களின் நிலையைக் கண்டு இரக்கம் கொள்ளாது, தனக்கு மட்டும் அனைத்து நலமும் இருந்து வரவேண்டும் என்று நினைப்பது முறையற்றது.