பக்கம்:சிறந்த வாழ்வுக்குச் சில யோசனைகள்.pdf/36

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

த. கோவேந்தன்

35


பெண்ணே! அழகு மகளே! உன் உள்ளத்தில் சில உண்மைகள் குடி கொள்ளட்டும். நீ பெற்றிடும் தெளிவுடன் எழிலைக் கட்டட்டும். தாமரை மலர் போல உன் அழகு மலரட்டும்.

நீ பருவம் அடைந்து அழகு மங்கையாகக் காட்சி தரும்போது, பல ஆண்களின் பார்வை உன்மீது படும். அவர்கள் ஏன் அப்படிப் பார்க் கிறார்கள் என்பது உனக்குத் தெரிய வரும். உன்னைத் தீய செயலுக்கு உட்படுத்த முயலுவார்கள். கெட்ட எண்ணங்களுடன் உன்னிடம் பேசி உன்னைக் கடத்திச் செல்ல நினைப்பார்கள்.

உன்னை நீதான் பாதுகாத்துக் கொள்ள வேண்டும். உன் மனத்தைப் பறி கொடுத்து விடாதே ஆண்கள் பேசும் இச்சக மொழிகளுக்கு மயங்கிப் பணிந்து விடாதே.

நன்றாக மனத்தில் உறுதிக் கொள். ஆண்களுக்கு உற்ற துணை பெண்தான். அதற்காக உணர்ச்சிக்கு அடிமைாகி விடக்கட்டாது. ஆணின் ஆசைகளை நி றை வே ற் று வ து மட்டுமே பெண்ணின் கடமையன்று. ஆண் பாடுபடும் போது பெண் உதவியாக இருப்பதுதான் வாழ்க்கையின் குறிக்கோள். ஆசைக்கு ஏற்றமுறையில் அன்புடன் ஆறுதல் அளித்து துணையாக இருக்க வேண்டும். இந்தக் குணங்களைக் கொண்டவள் தான் நல்ல ஆணின் உள்ளத்தைக் கவர முடியும்.