பக்கம்:சிறந்த வாழ்வுக்குச் சில யோசனைகள்.pdf/37

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

36

சிறந்த வாழ்வுக்குச் சில சிந்தனைகள்



பெண் எளிமையும், இனிமையும், அடக்கமும் கொண்டிருக்க வேண்டும். அவள் தன் கடமைகளைச் செய்திட நாட்டம் கொண்டிருக்க வேண்டும். நல்ல பெண் தேவையற்று ஊர் திரிய விரும்ப மாட்டாள். எப்போதும் உண்மையைப் பேசுவாள். பணிவும், கீழ்ப்படிதலும் அவளுக்கு. உரிய பண்பாகும். எப்போதும் முன் எச்சரிக்கையாக இருந்து, தன் ஒழுக்கத்தைப் பாதுகாத்துக் கொள்வாள். அவள் அன்புப் பார்வைகள் அவளுக்குச் சரியான முடிவுகளை மேற்கொள்ளத் துணை புரியும். அவளைக் கண்டால் விலைமாதர்கள் கடிட வெட்கித் தலை குனிவார்கள். வாய் திறந்து பேசக்கட்ட அச்சப்படுவார்கள். அவளிடம் காணப்படும் ஒழுக்கம் அந்த விலை மாதர்களுக்குத் திகைப்பை உண்டாக்கும்.

அப்படிப்பட்ட பெண்ணை மனைவியாக அடைபவன் வாழ்நாள் முழுவதும் மகிழ்ச்சியாக வாழ்வான். நிறைந்தஅன்பும் அமைதியும் வீட்டில் எப்போதும் இருக்கும். இல்லத்து அரசியாக எல்லாப் பொறுப்புகளையும் அவள் சீராகச் செய்து வருவாள். எதையும் சீர் தூக்கி ஆய்ந்த பின்னரே அவள் முடிவுகளை மேற்கொள்வாள். அவள் சொல்லை எவரும் தட்டிக் கழிக்க மாட்டார்கள்.

அவள் அதிகாலையில் எழுவாள். வீட்டு வேலைகளைக் கவனிப்பாள். யார் யாருக்கு என்ன வேலையைத் தரவேண்டுமோ அதைப் பகிர்ந்து தருவாள். குடும்பத்தைக் கவனித்துக் கொள்வதில்