உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:சிறந்த வாழ்வுக்குச் சில யோசனைகள்.pdf/39

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

38

சிறந்த வாழ்வுக்குச் சில சிந்தனைகள்

ஊக்கமளித்து புதிய ஒரு தெம்பை உண்டாக்குவாள். மனைவியின் மடியில் தலை வைத்துக் கணவன் ஆறுதல் அடைவான்.

அப்படிப்பட்டவளைத் தன் மனைவியாகப் பெற்றவன் வாழ்வு எப்போதும் இன்பமாக இருக்கும்.

அவளை 'அம்மா’ என்று அழைத்திடும் பிள்ளைகளுக்கு எந்த ஒரு குறையும் இல்லாமல், இன்பம் பொங்கும் நிலை இருக்கும்.

கணவன்

மனிதனாக பிறந்தவன் திருமணம் செய்து கொண்டு இல்லற வாழ்வு நடத்த வேண்டும் என்பது இயற்கையின் கட்டளை. நீயும் ஒரு மனைவியை அடைந்து சமூகத்தில் மதிப்புடன் வாழ்ந்திடு.

ஆனால் பரபரப்புற்று முடிவை மேற்கொண்டு விடாதே. ஏன் என்றால் இப்போது நீ எடுக்கும் முடிவைப் பொருத்துதான் உன் எதிர்கால வாழ்க்கை அமையும்

எப்படிப்பட்ட பெண்ணை நீ மனைவியாக அடைய விரும்புகிறாயோ, அதைப்பற்றி முன்ன தாகவே சிந்தித்துச் செயல்படு.

தன்னை அழகுப்படுத்திக் கொள்ள அதிக நேரம் செலவிடும் பெண்ணை விரும்பாதே.