த. கோவேந்தன்
39
புதுப்புது ஆடைகள், அணிகலன்கள் மீது ஆசை கொண்டவளை விரும்பாதே. தன்னை எல்லோரும் பாராட்டவேண்டும் என்று ஆசைப்படுபவளை விரும்பாதே. எதற்கு எடுத்தாலும் சிரிப்பவளை விரும்பாதே. உரத்த குரலில் பேசிடும் பெண்ணை விரும்பாதே. வீட்டோடு தங்கி இருக்காமல் ஊர் சுற்றும் பெண்ணை விரும்பாதே. ஆண்கள் எதிரில் தோன்றி கவர்ச்சியைக் காட்டிடும் பெண்களை விரும்பாதே. அப்படிப்பட்ட பெண்கள் பாதையில் நடமாடாதே. அவர்களின் புற அழகில் மயங்கி விடாதே.
நல்ல உள்ளமும், நல்ல குணமும், தூய்மையான ஒழுக்கமும் கொண்டவளாக இருப்பவளை உன் மனைவியாக ஏற்று இல்லற வாழ்வு நடத்த ஆசைப்படு. நல்ல அறிவு கொண்டவளைத் தேர்ந்தெடுத்து வாழ முற்படு அப்படிப்பட்டவள் தான் உனக்கு நல்ல வாழ்க்கைத் துணைவியாக இருக்க முடியும்.
அப்படிப்பட்ட சிறந்த மனைவியை உலகம் அளிந்து அரிய பரிசாக மதித்திடு.
உன் மனைவியே உன் இல்லத்தின் அரசி, உன் அன்பைச் செலுத்தி அவள் நெஞ்சத்தில் இடம் பெற்றிடு. அவள்தான் குடும்பத் தலைவி என்பதால், அவளுக்கு எப்போதும் உரிய மதிப்பும், மரியாதையும் கொடுத்து நடந்திடு.