த. கோவேந்தன்
41
கொண்டு, எக் காரணம் கொண்டும் முரட்டுத்தனமாக நடந்து கொள்ளாதே. கடுமையான சொற்களை வீசி மனத்தைப் புண்படுத்தி விடாதே. மேலும், நீயே உன் குற்றம் குறைகளைச் சிந்தித்து முடிவுகளை எடு.
தந்தை
பெற்ற பிள்ளைகளுக்கு நீதான் தகப்பன் என்பதை மனத்தில் எப்போதும் இருக்கவேண்டும். பெற்ற பிள்ளையைப் பேணிக் காப்பதும் பெற்ற தகப்பனின் கடமை.
நீ பெற்ற பிள்ளை பெரியவனாக உனக்கு நல்ல பெயரையும், நற்பயனையும் தரப் போகிறானா, இல்லையா என்பதும் நின்னிடம் உள்ளது. இப்படிப்பட்ட பிள்ளையை ஏன் பெற் றோம் என்று இடர்ப்படாமல் இருக்க வேண்டுமானால் அதற்கான பொறுப்பை நீதான் உணர்ந்து நடந்து கொள்ள வேண்டும்.
நீ பெற்ற பிள்ளை சமூகத்தில் நல்ல குடி மகனாக விளங்கப் போகிறானா, இல்லை ஊரார் பழிப்பிற்கு ஆளாகப் போகிறானா என்பதை முடிவு செய்யும் பொறுப்புமுன்னிடமேதான் உள்ளது.
எவ்வளவு விரைவாக மக்களுக்கு நல் அறிவு புகட்டுகிறாயோ அதைப் பொறுத்து நல்ல எதிர்-
சி-3