த. கோவேந்தன்
45
உடன்பிறப்புகள்
நீங்கள் எல்லாம் ஒரு தாய் வயிற்றில் பிறந்தவர்கள். உங்களின் ஒரே தந்தைதான் உங்களுக்காகப் பாடுபட்டு, உங்களை வளர்த்தவன். உங்கள் எல்லோரையும் பால் கொடுத்து வளர்த்ததும் ஒரே தாய்தான்.
எனவே, நீங்கள் எல்லோரும் பற்று, பாசம் கொண்டு குடும்பத்தில் அமைதியும், மகிழ்ச்சியும் எப்போதும் நிலவப் பாடுபடுங்கள்.
அப்படியே நீங்கள் பிரிந்து வாழ நேரிட்டாலும் உங்கள் பற்று, அன்பு, உறவு உங்கள் குடும்பத்தினரிடம் எப்போதும் போல இருக்கட்டும். உன்னோடு பிறந்தவர்களை மறந்து விடாதே. உன் பெற்றோர்களை மறந்துவிடாதே. உலகப் பெருங் குடும்பத்துள் உன் குடும்பமும் அடங்கும். அனைவரும் உறவினர். இந்தப் பேருள்ளமே சீருள்ளம்.
உன் உடன் பிறப்புகளிடம் அன்பாக இரு. அவர்களுக்குன்னால் முடிந்த உதவி செய்திடு. உடன் பிறந்த மகளிர் வறுமையிலோ தொல்லைகளிலோ திண்டாடும்போது அவர்களைப் புறக்கணித்து விடாதே.
அப்படி ஒன்றுபட்டு அன்பாக வாழ்ந்தால்தான் உன் குடும்பத்தின் உடைமையும் உறவும் எல்லோருக்கும் கிட்டும். அந்த நிலையில்தான் பெற்றோர்களும் குறிப்பாக உன் தாய் தந்தை