46
சிறந்த வாழ்வுக்குச் சில சிந்தனைகள்
உடன் பிறந்த எல்லோருககும் அன்பு காட்டி நன்றாக வார்க்க முடியும். உன்னைப்போல் உன் உடன் பிறந்தவர்களும் நன்றாக வாழ முடியும்.
அறிவும்-அறியாமையும்
உலகம் அளிப்பது அறிவுச் செல்வம். அது விருப்பப்படி யாருக்கு எந்த அளவிற்குழைத்து முயல்கிறார்களோ அந்த அளவுக்கு முடிவு செய்து தருகிறது.
உனக்கு உலகம் எந்த அளவிற்கு அறிவைத் தந்திருக்கிறது என்பதை நீ அறியவேண்டும். எதிலும் உண்மையைக் கண்டறியும் ஆற்றலைப் பிறருக்குப் பகிர்ந்து கொடு. ஏழைகளுக்கு ஏதுமற்றவர்களுக்கு நல்லறிவைப் புகட்டு. அப்போதுதான் சமன்மை ஏற்படும். அது உனக்கே வளர்ச்சியைத் தரும். ஏழை பணக்காரன் என்ற ஏற்றத் தாழ்வை நீக்கும்.
நல்ல அறிவு படைத்தவன் தவறான ஊகம் கொள்ள மாட்டான். எதையும் அறிந்தவனுக்கும் சில சமயங்களில் ஐயப்பாடு உண்டாகும். படிக்காத முட்டாளுக்கு எதிலும் ஐயம் என்பதே உண்டாகாது. தான் எல்லாம் அறிந்தவன் என்பவன் தன் அறியாமையை அறிந்தவன் அல்லன்.
அறியாமையில் செருக்குப் படைத்திருப்பவன் மன்னிப்புக்கு உரியவன். வரம்புக்கு மீறி அதிகம்