த. கோவேந்தன்
47
பேசுபவன் முட்டாள்மையினால் தவறு செய்கிறான். அப்படிப்பட்டவர்களின் பொறுப்பற்ற பேச்சைப் பொருட்படுத்திப் பெரிதாக எடுத்துக் கொள்ளாமல் அவர்களிடம் இரக்கம் காட்டுவது நல்லது. நான் தான் அறிவாளி-அனைத்தும் அறிந்தவன் என்று ஆணவம் கொள்ளாதே! எதையும் யாரும் முழுமையாக அறிந்தவர் இல்லை. எவனுக்கும் தன் அறியாமையும், தன் குற்றமும் எளிதில் புலப்படாது.
நல்ல அறிவாளி தன் அறியாமையை உணர்ந்து அடக்கமாக இருப்பான். எதற்கும் தன்னைப் பிறர் பாராட்ட வேண்டும் என்று நினைக்க மாட்டான். அறிவிலி தன் அறியாமைக் கடலின் ஆழத்தில் படிந்துள்ள கூழாங் கற்களையே பெரிதாக நினைத்துத் தேடுவான். அவைதாம் கடல் அடியில் உள்ள முத்துகள் என்பான். அதைக் கேட்டுப் பிறர் பாராட்ட வேண்டும் என்று ஆசைப்படுவான்.
பயன் அற்ற பணிகளைப் புரிந்துவிட்டு மாபெரிய செயற்பாடுகள் புரிந்து விட்டதாகப் பீற்றிக் கொள்வான். எதைக் கண்டு வெட்கப்பட வேண்டுமோ அதை யுணர மாட்டான். அறிவுப் பாதையில் செல்வதாகத் தகாத செயல்களைப் புரிந்திடுவான். அவனுடைய முயற்சிக்குப் பரிசாகக் கிடைப்பது ஏமாற்றமும் தோல்வியுமே ஆகும்.
அறிவாளி சிந்தித்துச் சிந்தித்து அறிவைக் கொள்முதல் செய்து கொள்வான். கலைகளில்