உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:சிறந்த வாழ்வுக்குச் சில யோசனைகள்.pdf/49

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

48

சிறந்த வாழ்வுக்குச் சில சிந்தனைகள்

நாட்டம் கொண்டு, அதன் பயனாகப் பொது மக்களுக்குப் பயன்படக்கூடிய காரியங்களைப் புரிந்து மதிப்பைத் தேடிக்கொள்வான். ஒழுக்கமே அவன் கண்ட சிறந்த அறிவு. வாழ்க்கையை ஆராய்ந்து புரிந்து கொள்வதையே அவன் அறிவியலாகக் கொண்டவன்.

செல்வமும்-ஏழைமையும்

எவன் ஒருவன் ஊக்கத்தால் உழைப்பால் செல்வத்தைப் பெற்று, அதைச் சரியாகப் பயன் படுத்துவதற்கான அறிவையும் பெற்றிருக்கிறானோ, அவன் பெருமைக்குரியவன்.

அவன் தன் செல்வத்தைக் கண்டு மகிழ்கிறான். ஏன் என்றால், அந்தச் செல்வம் அவனுக்கு நல்லது செய்யத் துணை புரிகிறது.

அவன் ஏழைகளைக் காப்பான். காயமுற்ற பிணியாளருக்குத் தொண்டு செய்வான். நலிந்த மக்களுக்குப் பேராதரவு அளிப்பான்-யாரையும் தடுக்க நினைக்க மாட்டான். யாரிடம் பரிவு காட்ட வேண்டுமோ, அவர்களின் தேவைகளைக் கேட்டறிந்து, முறையாகப் போதிய உதவியளித்து மகிழ்வான்.

பிறரிடம் உள்ள திறமைக்கு மதிப்புக் கொடுப்பான். சீரிய நோக்கம் கொண்டவர்களுக்கு ஊக்கமளித்து உதவி புரிவான். பாராட்டத்தக்க பெரிய காரியங்களைச் செய்து நல்ல பல திட்டங்களைத்