பக்கம்:சிறந்த வாழ்வுக்குச் சில யோசனைகள்.pdf/50

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

த. கோவேந்தன்

49

தீட்டி, வேலை வாய்ப்புகளை அதிகரித்து நாட்டை வளமானதாக்குவான். பல கலைகள் அவனால் முன்னேற்றமடையும்.

தன்னிடம் பகுதியாகக் குவிந்திருக்கும் செல்வம் ஏழைகளுக்கும், அக்கம் பக்கம் வசிப்பவர்களுக்கும் உரியது என்றே கருதுவான்.

எவரையும் அவன் ஏமாற்ற மாட்டான்.

ஆனால், தன்னிடம் குவிந்துள்ள செல்வத்தைத் தனக்கு மட்டுமே செலவிட்டு மகிழ்ச்சி கொள்பவன் பரிவிரக்கத்திற்குரியவன். ஏழை. களைக் கண்டால் வெறுப்பான். அவர்கள் பாடுபட்டு வியர்வையைச் சிந்துவதைச் கவனிக்க மாட்டான்.

கொஞ்சமும் இரக்கமின்றி, பிறரை ஒடுக்கி, வஞ்சித்துத் தன் வாழ்வை உயர்த்திக் கொள்வான். அவன் உடன் பிறந்தவர்களே நலிந்து விட்டாலும் கலங்கமாட்டான்.

ஏதிலர்களின் அழுகையைக் கண்டு, தான் மட்டும் பால் குடிப்பான். விதவைகளின் வேதனைக் குரலை அவன் இனிய இசையாகக் கருதுவான்.

செல்வத்தின் மீது அவன் கொண்டுள்ள தணியாத காதல், அவன் நெஞ்சத்தைக் கல்லாக்கி விடும். ஏழைகளின் துன்பம், இல்லாதவர்களின் ஏக்கம், வறுமையால் வாடிடும் மக்களின் துயரம் அவனை ஏதும் கலங்க வைக்காது.