பக்கம்:சிறந்த வாழ்வுக்குச் சில யோசனைகள்.pdf/51

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

50

சிறந்த வாழ்வுக்குச் சில சிந்தனைகள்

அப்படிப்பட்டவனைத் தொடர்வது இழி மொழிகள். எப்போதும் அச்சத்துடன்தான் வாழ்க்கையை நடத்துவான். மற்றவர்களுக்கு அவன் இழைத்த கொடுமை அவன் நெஞ்சை விட்டு அகலாது. அவனுக்கு அமைதியைத் தராது.

துன்பத்தில் தவிக்கும் ஏழையின் நிலை என்ன?

தன்னலமும், கல் நெஞ்சமும் கொண்டவனை விட ஏழை மேலானவன். அவனும் மகிழப் பல காரணங்கள் உள்ளன.

அவன் அமைதியாக அமர்ந்து உண்ணும் போது, அவன் பக்கத்தில் சுரண்டி வாழ்பவர்களோ, புகழ் உரையின் மூலம் பிழைப்பவர்களோ இல்லை.

பணக்காரனுக்கு உள்ள கெட்ட நோய்கள் அவனுக்கு இல்லை.

அவனுக்குக் கிடைத்ததை உண்ணும்போது அது சுவையாகவே இருக்கிறது. அவன் அருந்தும் தண்ணீரே அவனுக்கு மகிழ்ச்சி தருகிறது.

ஏழையின் கடுமையான உழைப்பு அவன் உடல் நலத்தைப் பாதுகாக்கிறது.

ஏழை அளவிற்கு மீறிய ஆசைகளைக் கொள்வதில்லை. தனக்கு இன்றியமையாத தேவை எது என்பதையே நாடுகிறான். அதிலே தான் அவனுக்கு நிறைவு கிடைக்கிறது. உள்ள-