பக்கம்:சிறந்த வாழ்வுக்குச் சில யோசனைகள்.pdf/53

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

52

சிறந்த வாழ்வுக்குச் சில சிந்தனைகள்

உன் வேலைகளை விழிப்புடன் சுறுசுறுப்பாக நிறைவேற்று. உன் மேலாளின் நம்பிக்கைக்குரியவ னாக உள்ளவற்றை வளர்த்துக்கொள். அதற்கான பலனை நீ உரிய காலத்தில் அவரிடம் அடைவது உறுதி.

மேலாளாக இருப்பவன் உடன் பணிபுரிபவர்களிடம் அறத்துக்குக் கட்டுப்பட்டு, முறையாக நடந்துகொள்ள வேண்டும். அப்போதுதான் பணியாளர்கள் மேலாளிடம் உண்மையாக, நேர்மையாக நடப்பார்கள். சொன்னதைச் செய்ய முன் வருவார்கள்.

பணியாலும் உன்னைப்போல ஒரு மனிதன் என்பதை மறந்து விடாதே. நீ பணியாரிடம் கடுமையாக நடந்துக்கொண்டு அதிக வேலை கொடுத்தால், அது அவனுக்கு அச்சத்தை உண்டாக்கும்.

பணியாளன் தவறு செய்யும்போது, அவனிடம் அன்பாகப் பேசி, அவன் தவற்றைப் புரிந்துகொள்ளும் முறையில் விளக்கம் அளித்துத் திருத்த முயல வேண்டும். மேலாள் மன்னிக்கும் மனப்பான்மையை அதிகம் கொண்டிருக்க வேண்டும். நீ ஒரு நல்ல மேலாள் என்று பணியாளன் உணர்ந்து விட்டால் அவன் இட்ட வேலைகளை மனமகிழ்ச்சியுடன் செய்து முடிப்பான். அவனுடைய பணியை மெச்சிடவும் அதற்கு உரிய முறையில் வெகுமதி அளிக்கவும் மேலாள் முன்வர வேண்டும்.